‘1 vs 11’.. இதனாலதாங்க அவரை ‘கிங்’ கோலின்னு சொல்றாங்க.. தாறுமாறாக புகழ்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களான புஜாரா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தநிலையில் இப்போட்டியை குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் பகிர்ந்துள்ளார். அதில், ‘இப்போட்டியில் நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால் தற்போது இந்தியாவில் 223 ரன்களுக்குள் சுருட்டி உள்ளோம். அதே நேரத்தில் நாங்களும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும்.

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகதான் இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் கூட விராட் கோலி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சூழ்நிலையை புரிந்துகொண்டு விளையாடுவதில் அவருக்கு நிகர் வேறு யாருமே இல்லை’ என விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தபோதும், விராட் கோலியை மட்டும் தென் ஆப்பிரிக்க அணியால் நீண்ட நேரமாக அவுட்டாக்க முடியவில்லை. கடைசியாக ரபாடா வீசிய 73-வது ஓவரில் தான் விராட் கோலி அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVSA, RABADA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்