உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புகழ்பெற்ற ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தாவும் ஒருவர் ஆவார். 13 வயதான இவர் இந்தத் தொடரில் இதுவரையில் 8 புள்ளிகளை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சேம்பியனான மெக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

39 மூவ்

கார்ல்சன் உடனான போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக காய்களை நகர்த்தினார் பிரக்ஞானந்தா. கருப்பு நிற காய்களுடன் அபாரமாக விளையாடி இவர் டார்ஸ்ச் வகை கேம்-படி ஆடி வெற்றியும் பெற்றார். முன்னதாக தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்று இருந்த உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம் தோல்வி அடைந்தது செஸ் விளையாட்டு வீரர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் முதல் சுற்றில் ஒரு வீரருக்கு 15 போட்டிகள் நடைபெறும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும் டிரா செய்தால் ஒரு புள்ளியும் வழங்கப்படும். 

12 வது இடம்

இந்தத் தொடரில் இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா, 8 புள்ளிகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் அவர் 12 வது இடத்தில் இருக்கிறார். நடப்பு தொடரில் லெவ் அர்னோனியை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் தொடரில் கார்ல்சன் 19 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

துவக்கத்தில் சில போட்டிகளில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்ததால் கவலையில் இருந்த இந்திய செஸ் ரசிகர்கள் இப்போது அவர் உலக சேம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருப்பதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

செஸ், .பிரக்ஞானந்தா, மெக்னஸ்கார்ல்சன், PRAGGNANANDHAA, AIRTHINGSMASTERSCHESS

மற்ற செய்திகள்