VIDEO: நல்லவேளை கீழ விழுந்திட்டாரு... இல்லன்னா அவ்ளோதான்.. ‘ஹிட்மேன்’ தலையை பதம் பார்க்க பார்த்த பந்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் (IPL) தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அவ்வப்போது சிக்சர், பவுண்டரிகளை விளாசி டி காக் அதிரடி காட்டினார். அப்போது ரசல் வீசிய 9-வது ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட டி காக், அதை ஸ்ட்ரைட் டிரைவ் திசையில் பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் பந்து, நான் ஸ்டைர்கர் எண்டில் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் தலையை நோக்கி சென்றது. இதனால் உடனே விலகிய அவர், தடுமாறி கீழே விழுந்தார்.

இதனை அடுத்து 33 ரன்கள் எடுத்திருந்தபோது சுனில் நரேனின் ஓவரில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் ஷர்மா வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பிரஷித் கிருஷ்ணா வீசிய 15-வது ஓவரில் டிக் காக்கும் (55 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை மும்பை அணி எடுத்தது. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை லோக்கி பெர்குசன் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும், சுனில் நரேன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த மும்பை அணி 6-வது இடத்துக்கு சென்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்