'செமி பைனல்' போக ... இத மட்டும் 'இந்தியா' பண்ணனும்' ...'பாகிஸ்தானும் டஃப்' கொடுப்பாங்க போல!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எந்தந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்திய அணி இதுவரை நடைபெற்ற எந்த போட்டியிலும் தோல்வியை தழுவவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது.
இதனிடையே உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இந்தியா இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும். அதே நேரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றதன் மூலம், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் இந்திய அணி 4இல் வெற்றிப் பெற்று 9 புள்ளிகளுடன் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி எந்த தோல்வியையும் தழுவாத நிலையில்,எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெருவது உறுதியாகிவிடும். இதற்கிடையே 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் உள்ளது. வரும் போட்டிகளில் நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை பாகிஸ்தான் அணி சந்திக்க உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. அதற்கு ஒரு அதிர்ஷ்டமும் வேண்டும் எனவும் கூறலாம்.இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெறவேண்டும். அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அடையவேண்டும். இது அனைத்தும் நடந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறலாம். எனவே வரும் போட்டிகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர் செய்த காரியம்..’ வைரலாகும் ஃபோட்டோ..
- 'அது என்ன அவ்ளோ பெரிய தப்பா..'.. 'அதத்தவிர நான் என்ன பண்ணிட்டேன்'.. பாய்ந்த கேப்டன்!
- ‘கோலி தான் ஹீரோன்னா அவர மாதிரி விளையாடக் கத்துக்கோங்க..’ பாகிஸ்தான் வீரருக்கு அறிவுரை சொன்ன முன்னாள் வீரர்..
- 'விராட் கோலி ஒரு மாடர்ன் டே ஜீசஸ்'... 'புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து முன்னாள் வீரர்'!
- ‘வெளிய போனா உங்களையும் கூட்டிட்டுதான் போவோம்..’ பாத்தீங்கள்ல கடைசி மேட்ச.. எச்சரிக்கை செய்த கேப்டன்..
- ‘அவமானத்தின் விளிம்புக்கே வந்துட்டோம்..’ ரசிகர்களுக்கு விமர்சிக்க உரிமை இருக்கு.. வேதனையில் பேசிய கேப்டன்..
- 'கொஞ்சம் ஜாஸ்தியா மரியாதை கொடுத்து ஆடிட்டாங்க... இந்திய பேட்டிங்கை கிண்டலடித்த முன்னாள் கேப்டன்!
- 'உலகக் கோப்பையில் இதுல பாகிஸ்தான் முதலிடம்'... 'கடைசி இடத்தில் இந்திய அணி'!
- 'கடைசி ஷாட்டில் சிக்சர்னு நினைச்சா'... 'க்ரவுண்ட்லேயே கண்ணீர்விட்டு கதறிய வீரர்'!
- 'தோனி சொன்னதை அப்படியே செய்தேன்'... 'அதனாலதான் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது'!