VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரொம்ப Rare’.. டிரா ஆன மேட்ச்.. நடுவரிடம் சிம்பிளா ஒரு ‘கேள்வி’ கேட்ட வீரர்.. இணையத்தில் ஹிட்டடித்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நெகிழ்ச்சிகரமாக நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் கத்தார் நாட்டின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் (Mutaz Essa Barshim) மற்றும் இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி (Gianmarco Tamberi) இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இரண்டு வீரர்களும் 2.37 உயரம் தாண்டுதலை ஒரே புள்ளிகளில் முடித்தனர்.
இதனைத் தொடர்ந்து 2.39 மீட்டர் உயரத்தையும் இருவரும் நிறைவு செய்தனர். ஆனால் இதில் இரண்டு பேருமே மூன்று முறை தவறு செய்திருந்தனர். அதனால் இரண்டு பேருக்குமே ஒரே அளவில் புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஒலிம்பிக் அதிகாரி இவர்களுக்கு இடையில் டைபிரேக்கர் நடத்த முடிவு செய்தார். கடைசியாக ஒருமுறை இருவரையும் தாண்ட வைத்து வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் ஆட்டம் டிரா ஆனதாக கூறி இரண்டு வீரர்களிடமும் டைபிரேக்கர் குறித்து நடுவர் பேசினார். அப்போது குறுக்கிட்ட முடாஸ், ‘நாங்கள் இருவரும் தங்கப்பதக்கத்தை ஷேர் செய்து கொள்ளலாமா? இதற்கு ரூல்ஸில் இடம் இருக்கிறதா?’ என நடுவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு நடுவர் ‘ஆம்’ என பதிலளித்தார். இதனை ஜியான்மார்கோவிடம் முடாஸ் கூறியதும், உற்சாகத்தில் அவரை கட்டித்தழுவி துள்ளிக் குதித்தார். இதனை அடுத்து இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், முடாஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேருமே நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
ஜியான்மார்கோவிற்கு காலில் காயம் ஏற்பட்டபோது அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் ஆடும் அளவிற்கு துணையாக இருந்தது முடாஸ்தான். இருவரும் வேறு வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும், உயரம் தாண்டுதல் என்ற ஒற்றை மேடைதான் இருவரையும் நண்பர்கள் ஆக்கியுள்ளது.
முடாஸின் உதவி இல்லை என்றால் என்னுடைய விளையாட்டு வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும் என ஜியான்மார்கோவே ஒர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக நேற்று நண்பர்கள் தினத்தின்போது இந்த சம்பவம் நடந்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒலிம்பிக்கில் ‘வரலாறு’ படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி.. சர்ப்ரைஸாக வந்த ஸ்டார் ‘கிரிக்கெட்’ ப்ளேயரின் வாழ்த்து.. ‘இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல’!
- ‘1 நொடியில் காலியான 33 வருச ரெக்கார்டு’.. யாரு சாமி இவங்க.. தங்கம், வெள்ளி, வெண்கலம் 3-ம் ஒரே நாடு..!
- "நோய்வாய்ப்பட்டு இருக்கும் தாயை.. மீட்டுக் கொண்டுவரப் போகும் மகளின் ஒலிம்பிக் பதக்கம்"!.. லவ்லினாவின் வலிமிகுந்த குடும்பப் பின்னணி!
- ‘கடைசி நேரத்துல வந்து ஏன் அப்படி சொன்னீங்க?’.. ‘தயவுசெஞ்சு விளக்கம் கொடுங்க’.. மேரி கோம் பரபரப்பு ட்வீட்..!
- இந்தியாவிற்கு அடுத்த 'பதக்கம்' கன்ஃபார்ம்...! 'அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை...' யார் இவர்...? - குவியும் பாராட்டுக்கள்...!
- பதக்கத்தோட தான் 'இந்தியா' திரும்புவேன்னு நினச்சேன்...! 'தோத்துட்டேன்னு சத்தியமா நம்பவே முடியல...' - கண்ணீர் விட்டு அழுத மேரி கோம்...!
- என்னையே ஜெயிப்பியா நீ?.. எதிராளியின் காதருகே சென்று... ஒலிம்பிக் போட்டியில்... குத்துச்சண்டை வீரர் செய்த பகீர் சம்பவம்!!
- "தோல்வியைத் தழுவிய இந்திய ’ஒலிம்பிக்’ வீராங்கனை’.. ’பயிற்சியாளர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சை’.. ’உச்சகட்ட கோபத்தில் தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு’!
- 'ரெண்டே 2 பேர ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி...' 'தங்கத்தை தட்டி தூக்கி...' - கெத்து காட்டும் குட்டி நாடு...!
- VIDEO: 'ஒலிம்பிக் போட்டியில் கியூட் லவ் ஸ்டோரி'!.. டிவி நேரலையில் சட்டென்று propose செய்த பயிற்சியாளர்!.. டபுள் ஓகே சொன்ன வீராங்கனை!