'வெண்கல' பதக்கத்தை வென்றாரா பிவி சிந்து...? 'விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்...' - சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (01-08-2021) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பிங் ஜியா ஆகியோர் ஆக்ரோஷமாக பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் தீவிரமாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்றுவதற்காக இருவரும் போராடினர்.
பிவி சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், புள்ளிகளில் மிகவும் நெருங்கி வந்தார் ஹி பிங் ஜியா. இதன் காரணமாக 2-வது செட் விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆனாலும், ஆட்டத்தை மிகவும் அற்புதமாக கொண்டுசென்ற பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டியில் சிந்து தோல்வியடைந்த காரணத்தினால் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் பேட்மிண்டன்'... 'அசத்தும் மாளவிகா'... வெற்றி சீக்ரெட்!
- ‘இளம் வீராங்கனை.. பி.வி.சிந்து ஓய்வு அறிவித்தாரா?’.. ‘பரபரப்பை’ கிளப்பிய ‘அவரது’ ட்வீட்.. ‘உண்மை என்ன?’
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- ‘வரலாறு படைத்தார் பி.வி.சிந்து’.. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில்.. ‘தங்கப்பதக்கம் வென்று சாதனை’..