‘வரலாறு படைத்தார் பி.வி.சிந்து’.. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில்.. ‘தங்கப்பதக்கம் வென்று சாதனை’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தரவரிசையில் 5வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், 4ஆம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நோசோமி ஒகுஹராவுடன் மோதினார். முதல் செட்டிலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 42 கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.

 

 

PVSINDHU, WORLD, CHAMPIONSHIP, BADMINTON, GOLD, HISTORY, WIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்