"இந்த டீம் நிச்சயமா பிளே ஆஃப் போகும்.. அதுக்கு காரணமா அந்த டீமோட 'கேப்டன்' இருப்பாரு.." உறுதியாக சொல்லும் 'ஆகாஷ் சோப்ரா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் வைத்து, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றியும், கோப்பையை தட்டிச் செல்லும் அணி எது என்பது பற்றியும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கணித்துக் கூறி வருகின்றனர்.


அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை முதல் மூன்று அணிகளாக அவர் தேர்வு செய்துள்ளார்.

இதில், மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி, இந்த முறையும் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் விளங்குகிறது. மற்றொரு அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள நிலையில், கடந்த சீசனில் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தது.

தொடர்ந்து, நான்காவது இடத்தில் பஞ்சாப் அணியை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 'நான்காவது இடத்திற்கு பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளிடையே போட்டி உருவாகலாம். ஆனால், நான் ஏன் பஞ்சாப் அணியை தேர்வு செய்தேன் என என்னால் விளக்கம் சொல்ல இயலவில்லை. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்' என ஆகாஷ் சோப்ரா தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


 

கடந்த சீசனில் 6 ஆவது இடம் பெற்று வெளியேறிய பஞ்சாப் அணி, அந்த சீசனில் சிறப்பாக ஆடிய போதும், அதிர்ஷ்டம் இல்லாமல் வெளியேறியிருந்தது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல், 670 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப்பை தட்டிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்