"20 லட்சத்தில் ஆரம்பித்து 5.25 கோடிக்கு வாங்கப்பட்டு..." 'ஐபிஎல்' ஏலத்தில் தனியாளா மாஸ் காட்டிய 'தமிழன்'!!... யார் இந்த 'ஷாருக்கான்'??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெற்றது.

கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு விலை போன வீரராக மோரிஸ் பதிவானார். மேலும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது.

இந்நிலையில், ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் ஷாருக்கானை 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது. 20 லட்ச ரூபாயாக இவரது அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், பஞ்சாப், டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட அணிகள் அவரை அணியில் இணைக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் பஞ்சாப் அணி, ஷாருக்கானை வாங்கியது.

 

சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணியில் ஷாருக்கான் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரை தமிழக அணி கைப்பற்றியிருந்த நிலையில், இறுதி போட்டியில் கடைசி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். அது மட்டுமில்லாமல், லீக் போட்டிகளிலும் ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளங்கிய ஷாருக்கானை அணியில் இணைக்க, அனைத்து ஐபிஎல் அணிகளும் போட்டி போடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதே போல, இன்று ஐபிஎல் ஏலத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில், ஷாருக்கானுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்