CSK வீரருக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை.. இப்போ புஜராவுக்கு வந்திருக்கு.. காரணம் இதுதானா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வீரர் மொயின் அலிக்கு ஏற்பட்ட விசா பிரச்சினை இப்போது இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவுக்கும் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 13 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் மூன்று போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருந்து வருகிறது. அதைப்போல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்திலும், சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 9-வது இடத்தில் இருந்து வருகின்றன.

முன்னதாக சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி விசா பிரச்சினை ஏற்பட்டது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே இந்தியா வர அவருக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனை அடுத்து இந்தியா வந்த அவர், லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்று விளையாடினார்.

தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர் புஜாராவுக்கும் இதேபோல் விசா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இதில் புஜாரா, சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து நடைபெற உள்ள ராயல் லண்டன் கோப்பை போட்டியிலும் புஜாரா விளையாடுகிறார். வரும் ஏப்ரல் 7-ம் தேதி சசெக்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்ல விசா விண்ணப்பித்திருந்த புஜாராவுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு முன்பாக அவர் சசெக்ஸ் அணியுடன் இணைந்து விடுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் புஜாரா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, PUJARA, VISA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்