"ஆத்தி.. இவரா 'சிக்ஸ்', 'ஃபோர்'ன்னு அடிக்குறது?!.." பட்டையைக் கிளப்பிய 'சிஎஸ்கே' வீரர்... 'வீடியோ' வேற 'லெவல்'ல இருக்கே!.. கொண்டாட்டத்தில் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணியின் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று, 14 ஆவது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. முன்னதாக, இந்த ஐபிஎல் தொடருக்கு வேண்டி, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து ஏலம் நடைபெற்றிருந்தது.

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மொயின் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது. இதில், இந்திய வீரரான புஜாரா, 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 வீரரான புஜாரா, குறைந்த ஓவர் போட்டிகளில் களமிறங்காமல், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து ஆடி வந்தார்.

டெஸ்ட் அணிக்கு தான் புஜாரா பொருத்தமாக இருப்பார் என எண்ணி, ஐபிஎல் போட்டிகளில், எந்த அணியும் அவரைத் தேர்வு செய்யாமல் இருந்து வந்தது. இதனையடுத்து, இந்த சீசனுக்காக சென்னை அணியில் ஆடவுள்ள புஜாரா, சக வீரர்களுடன் இணைந்து, இதற்கான பயிற்சியை அவர் மும்பையில் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், பயிற்சியின் போது, பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை மிகவும் வேகமாக அதிரடி ஷாட்களால் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார் புஜாரா. டெஸ்ட் போட்டிகளில், மிகவும் நிதானமாகவே புஜாரா ஆடியதைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, அடித்து நொறுக்கும் வகையிலான அதிரடி ஆட்டம், அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகிரித்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி துவண்டு போய் கிடந்த நிலையில், இந்த முறை மீண்டு வரும் முனைப்புடன் சென்னை அணி உள்ளது.



அத்தகைய சூழ்நிலையில், புஜாராவின் அதிரடி பயிற்சி, அனைவருக்கும் மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்