இலங்கை டெஸ்ட் தொடர்.. புஜாரா, ரஹானே நீக்கப்பட்டது ஏன்? .. சுனில் கவாஸ்கர் அளித்த விளக்கம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை டெஸ்டில் புஜாரா, ரஹானேவை நீக்க பிசிசிஐ எடுத்த முடிவு எதிர்பார்த்ததுதான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ  அறிவித்துள்ளது.  ரோகித் தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

ரஹானே, புஜாரா நீக்கம்

சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு மோசமான பேட்டிங் காரணமாக  துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே மற்றும் புஜாரா இந்த டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.  தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாராவின் கடைசி 16 டெஸ்ட் சராசரி 27.93 ஆகும். 7 அரை சதம் மட்டுமே அடித்தார். ரகானேவுக்கு 15 ஆட்டத்தில் சராசரி 20.25 ஆகும். இதில் 3 அரை சதம் அடங்கும்.

கவாஸ்கர் சளிர் பேச்சு

இந்நிலையில் புஜாராவும், ரகானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "ரஹானேவும், புஜாராவும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். தென் ஆப்பிரிக்க தொடரில் செஞ்சூரியோ அல்லது 80 முதல் 90 ரன்கள் வரை எடுத்திருந்தால் நிலைமை மாறுபட்டிருக்கும். ரஹானே ஒரு டெஸ்டில் சிறப்பாக ஆடினார். ஆனால் அது போதுமான ரன் கிடையாது. அணியை பொருத்தவரை அவரிடம் இருந்து ரன்களை அதிகம் எதிர்பார்த்தது.

ஒரு செஞ்சூரி கூட அடிக்கலை

இருவரையும் ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு தேர்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடினாலும் அவர்களால் இந்திய அணிக்கு மீண்டும் நுழைய இயலாது. 200 முதல் 250 ரன்கள் வரை எடுத்தால் அணிக்குள் நுழையலாம். ஆனால் தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக்கோப்பை வந்து விடும்.  நவம்பர்- டிசம்பருக்கு பிறகுதான் டெஸ்ட் நடைபெறும். அப்போது அவர்கள் 35 வயதை தொட்டு விடுவார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் புஜாராவும், ரஹானேவும் அணிக்கு மீண்டும் திரும்புவது கடினமே" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

ராஞ்சி கிரிக்கெட் போட்டி

மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி விளையாடி வரும் ரஹானே இந்தப் போட்டியில் 290 பந்துகளை எதிர்கொண்ட அவர் 129 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்து கிட்டத்தட்ட 417 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று,  சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா, மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். ஆனால், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய அவர், 83 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

புஜாரா 95 டெஸ்டில் 6713 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.87 ஆகும். 18 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 206 ரன் குவித்துள்ளார்.
ரஹானே 82 டெஸ்டில் 4931 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.52 ஆகும். 12 சதமும், 25 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 188 ரன் குவித்துள்ளார்.

PUJARA, AJINKYANE RAHANE, SUNIL GAVASKAR, SRILANKAN TEST MATCH, INDIAN TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்