"அய்யய்யோ, அது மட்டும் என்னால 'முடியாது'ங்க.. அவருக்கு பயமே இல்ல, நான் அப்படியா??.." 'பண்ட்' பற்றி 'புஜாரா' சொன்ன வேற 'லெவல்' விஷயம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 வீரரான புஜாரா, சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.

மிகவும் பொறுமையுடன் ஆடும் திறன் கொண்ட புஜாராவை, தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் அனைத்து அணிகளும் தேர்வு செய்யாமல் இருந்து வந்தது. இருந்தாலும், மீண்டும் ஐபிஎல் தொடரில் தான் ஆட வேண்டுமென்ற எண்ணத்தில், இந்த முறை தனது பெயரை ஏலத்திற்கு வேண்டி பதிவு செய்திருந்தார் புஜாரா. அதற்கு பலனும் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரது அடிப்படை தொகையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் தேர்வானதால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற புஜாரா, சென்னை அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மிகவும் நிதானமாகவே ஆடும் பழக்கமுடைய புஜாரா, பயிற்சியின் போது பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடித்து நொறுக்குவதைக் காணும் ரசிகர்களுக்கு, புஜாரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தான் கிரிக்கெட் போட்டியில் ஆடும் ஷாட்கள் குறித்து புஜாரா பேசியுள்ளார். 'வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஃபைன் லெக் திசையில், ஸ்கூப் ஷாட் அடிப்பது என்பது, நான் அதிக பயமில்லாமல் ஆடும் ஷாட்டாகும். ஐபிஎல் போட்டிகளில் கூட, மூன்று அல்லது நான்கு பவுண்டரிகளை நான் அப்படி அடித்துள்ளேன்' என கூறினார்.

சமீபத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், இந்திய வீரர் ரிஷப் பண்ட், ஆண்டர்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் என இரு வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் மூலம் பந்தினை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஷாட் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பேசுப் பொருளாகியிருந்தது.

ரிஷப் பண்ட் அடித்ததை போன்று ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களை உங்களால் அடிக்க முடியுமா என புஜாராவிடம் கேட்ட நிலையில், அதற்கு பதில் தெரிவித்த புஜாரா, சிரித்துக் கொண்டே, 'ஒரு போதும் என்னால் அப்படி அடிக்க முடியாது. வலது கை பேட்ஸ்மேனாக, அப்படி ஒரு ஷாட் அடிப்பது கடினமான ஒன்று.


ரிஷப் பண்ட் அந்த ஷாட்களை சிறப்பாக ஆடுவதற்கு காரணம், கொஞ்சம் கூட பயமில்லாமல் பண்ட் ஆடுவதால் தான்' என பண்ட் ஆட்டத்தை பாராட்டிப் பேசினார் ரிஷப் பண்ட் தற்போது ஆடுவதை போல, தொடர்ந்து தனது சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டும் எனவும், புஜாரா தனது பேச்சில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்