இந்தியா டீம்'க்கு வந்த சோதனை.. "அட போங்க பாஸ்.." உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, அடுத்தடுத்து தடுமாற்றம் கண்டு வருவதால், ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி, வரலாறு படைத்தது அசத்தியிருந்தது. இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீச, இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருந்தது.
சரிந்த விக்கெட்டுகள்
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமானது. காயம் காரணமாக இன்றைய போட்டியில், கேப்டன் விராட் கோலி களமிறங்கவில்லை. இதனால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ஒருபுறம், ராகுல் மட்டும் பொறுமையாக ஆடி களத்தில் நிற்க, மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.
ஏமாற்றும் சீனியர் வீரர்கள்
மயங்க் அகர்வால் 26 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாரா 3 ரன்னிலும், பின்னர் வந்த ரஹானே ரன் எதுவும் எடுக்காமல், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகமாக களமிறங்கி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், கடந்த சில மாதங்களாக, எந்த போட்டியிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
டிராவிட், லக்ஷ்மண் போன்ற டெஸ்ட் வீரர்கள், இந்திய அணிக்கு கிடைத்ததாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை பலரும் பாராட்டினார். பல தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு இருவரும் காரணமாகவும் இருந்துள்ளார்கள். ஆனால், கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இருவரது ஆட்டமும் எடுபடவில்லை. சீனியர் வீரர்களான இவர்களை மாற்றி விட்டு, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் யார் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர்.
தடுமாறும் புஜாரா, ரஹானே
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க பயணத்திற்கு முன்பும், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை களமிறக்க வேண்டாம் என்றும் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், இந்திய அணி தொடர்ந்து, புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பினை அளித்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், புஜாரா 0 & 16 ரன்களை எடுத்திருந்தார். அதே போல, முதல் இன்னிங்ஸில் 48 ரன்கள் எடுத்த ரஹானே, இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மீண்டும் ஏமாற்றம்
இந்நிலையில், இன்று ஆரம்பமான இரண்டாம் டெஸ்ட் போட்டியின், முதல் நாளிலேயே இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது, ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. அனுபவம் இருப்பதை அடிப்படையாக கொள்ளாமல், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது, துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புஜாரா மற்றும் ரஹானே போன்ற சீனியர் வீரர்களின் தொடர்ச்சியான ஃபார்ம் அவுட் விவகாரம், நிச்சயம் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீங்க லிஸ்ட்லயே இருக்க மாட்டீங்க தம்பி.. இந்திய கிரிக்கெட் அணி சீனியர் வீரரை எச்சரித்த முன்னாள் தேர்வாளர்..!
- சிறு வயது நட்பு.. ராஞ்சி முதல் இந்தியா டீம் வரை.. நெகிழ வைத்த கே எல் ராகுல் - மயங்க் அகர்வால்
- அபார வெற்றி.. செஞ்சுரியன் மைதானத்தில் வரலாறு படைத்த இந்தியா
- போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?
- இவரு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு?.. அப்செட் ஆன சுனில் கவாஸ்கர்.. நெருக்கடியில் கோலி?
- VIDEO: ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்.. இது ‘ஒன்னு’ போதுங்க அவரை டீம்ல எடுக்க.. கவனம் பெறும் ‘ரஹானே’ செய்த செயல்..!
- முதல் பந்தில் அவுட்.. அப்செட்டில் இருந்த புஜாரா.. ரியாக்ட் செய்த டிராவிட்.. ப்பா, மனுஷன் வேற லெவல்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்..
- அரைசதம் அடித்த மயங்க்... சொதப்பிய புஜாரா..! INDvsSA முதல் டெஸ்ட்!
- ‘அவங்க ரெண்ட பேர மட்டும் நம்பி இந்திய அணி இல்லை!’- ராகுல் டிராவிட்டின் அதிரடி பேச்சு; யாரைப் பற்றி சொல்கிறார்
- 'ஆட்டம் நம்மளோடதா இருக்கும்...'- இந்திய அணியை தூக்கி நிறுத்தும் புஜாரா