"அத்தன வருஷமா 'சான்ஸ்' கிடைக்காதப்போ, நான் பட்ட 'வேதனை' இருக்கே.." என்னால 'control' கூட பண்ண முடியல.." வலியுடன் 'புஜாரா' சொன்ன 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த தொடரை பிசிசிஐ பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளது.
மீதமுள்ள போட்டிகளை வேறு ஏதேனும் நாடுகளில் நடத்த வேண்டி, பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது பற்றி, இந்திய வீரர் புஜாரா (Pujara), யூ டியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் 1 பேட்ஸ்மேனான புஜாரா, மிகவும் நிதானமாக ஆடி ரன் எடுக்கக் கூடியவர். இவர் டெஸ்ட் வீரர் என்பதாலோ, என்னவோ, கடந்த 7 வருடங்களாக ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக, 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக புஜாரா ஆடியிருந்த நிலையில், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் காட்டி வந்தார்.
இந்நிலையில், இந்த சீசனுக்கு முன்பான ஏலத்தில், தனது பெயரை புஜாரா பதிவு செய்திருந்ததையடுத்து, அவரது அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்த நிலையில், சென்னை அணியினரின் முடிவிற்கு தனது நன்றிகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த சீசனில், ஒரு போட்டிகளில் கூட புஜாரா களமிறங்கவில்லை என்றாலும், ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறாமல் இருந்த சமயத்தில், தான் எப்படி வேதனைப்பட்டேன் என்பது பற்றி, புஜாரா அந்த வீடியோவில் பேசியுள்ளார். 'ஐபிஎல் போட்டிகளில், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது, எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில், நாம் தேர்வாகாமல் இருப்பது, அத்தனை எளிதான காரியம் இல்லை. அது என்னை அதிகம் காயப்படுத்தியது. அதே வேளையில், என்னால் அதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு பிறகு, சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை நோக்கி முன்னேறுவதில், நான் தொடர்ந்து பணியாற்றினேன்' என புஜாரா குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில், நாம் நிதானமாகவே ஆடிப் பார்த்த புஜாரா, சென்னை அணிக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது, சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்த பையனோட திறமைக்கு, 'ஆஹா, ஓஹோ'ன்னு பாராட்டி இருக்கணும்.. ஆனா, யாருமே கண்டுக்கல.." 'இளம்' வீரருக்காக ஆதங்கப்பட்ட 'சேவாக்'!!
- 'சிஎஸ்கே' அனுப்பிய 'ஃகிப்ட்'.. மகிழ்ச்சியுடன் 'ட்வீட்' செய்த இங்கிலாந்து 'வீராங்கனை'.. வைரலாகும் 'புகைப்படம்'!. "இவங்க வெறித்தனமான 'CSK' ஃபேன் போல!!"
- ‘இப்படியொரு கம்பேக் கொடுப்பாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல’!.. விமர்சனம் செஞ்சவரையே புகழ வச்சு ‘கெத்து’ காட்டிய சிஎஸ்கே..!
- "சீக்கிரமா குணமடைஞ்சு வாங்கப்பா.." பிரபல 'இந்திய' வீரரின் 'மகள்' வரைந்த 'ஓவியம்'.. உருகிப் போன 'நெட்டிசன்கள்'!!
- 'கூட வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாரும் கிளம்பிட்டாங்க!.. மைக் ஹசி மட்டும் சிக்கிட்டாரு'!.. 'ஸ்பெஷல் ப்ளான்' வைத்துள்ள சிஎஸ்கே!
- ‘சிஎஸ்கே அணியை துரத்தும் கொரோனா’!.. மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி.. வெளியான தகவல்..!
- ஐபிஎல்-ல விளையாடணும்னு ‘ஆசையா’ வந்த மனுசன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே.. நொந்துபோன சிஎஸ்கே வீரர்..!
- 'அந்த ஒரே ஒரு மேட்ச் தான்.. மொத்த ஐபிஎல்லயே நிறுத்திடுச்சா'?.. சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பீதி!.. திக்கி திணறும் பிசிசிஐ!
- "'இந்தியா' எனக்கு எப்போவும் 'ஸ்பெஷல்'.. அதுக்காக இது கூட பண்ணலன்னா எப்படி??.." 'சிஎஸ்கே' வீரர் செய்த 'உதவி'!!
- "இப்டி எல்லாம் நடக்குறத பாத்ததும்.. மொத்தமா நான் நொறுங்கியே போயிட்டேன்.." மனமுடைந்த 'பீட்டர்சன்'!!