கேட்ச் எடுக்காம காமெடி செய்த 'சீனியர்' வீரர்கள்.. "எல்லாத்தையும் பண்ணிட்டு அவங்க சொன்ன காரணம் தான் அல்டிமேட்"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

எளிதாக வந்த கேட்சை தவற விட்ட சீனியர் வீரர்கள், அதன் பிறகு சொன்ன காரணம் தான், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Fact Check : காதலியை சூட்கேசில் வைத்து கல்லூரி விடுதிக்கு கொண்டு வந்த மாணவர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

விறுவிறுப்பாக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பல முறை, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத வேடிக்கையான சம்பவங்கள் கூட நிகழும்.

அடிக்கடி இது போன்ற வீடியோக்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகவும் செய்யும். சமீபத்தில் கூட, பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் தொடரில், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது, ஃபீல்டரின் தேவையில்லாத தவறால், பேட்டிங் செய்த அணி, ரன்கள் ஓடி, அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

வேடிக்கையான இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலானது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், டி 20 லீக் தொடர்கள் நடைபெறும். இதில், பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் 'பாகிஸ்தான் சூப்பர் லீக்' தொடர், தற்போது நடைபெற்று வருகிறது.

எளிதான கேட்ச்

இதில் நடைபெற்ற ஒரு போட்டியில், Peshawar Zalmi மற்றும் Lahore Qalandars ஆகிய அணிகள் மோதின. அப்போது Peshawar அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹைதர் அலி, பெரிய ஷாட் ஒன்றை அடிக்க முயன்றார். ஆனால், அது சரியாக பேட்டில் படாமல், Edge ஆகியது. இதனால், அவர் அவுட்டாகும் வாய்ப்பு உருவான நிலையில், பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்களான முகமது ஹபீஸ் மற்றும் பகர் சமான் ஆகியோர், பந்து சென்ற பகுதியில் ஃபீல்டிங் நின்று கொண்டிருந்தனர்.

மோதிக் கொண்ட சீனியர் வீரர்கள்

இருவரில் ஒருவர் கேட்ச் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சிறிதாக மோதிக் கொண்டு, கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்டனர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பாகவே, சீனியர் கிரிக்கெட் வீரர்கள், இது போன்ற எளிதான கேட்சை விடும் வீடியோக்கள், அதிகம் இணையத்தில் ரவுண்டு அடித்து வரும். அந்த வகையில், தற்போது இந்த வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

என்னுடைய கேட்ச் தான்

எளிதான கேட்சை தவற விட்டது பற்றி, போட்டிக்குப் பிறகு பேசிய முகமது ஹபீஸ், 'முதலில் சமான் என்னுடைய கேட்ச் என தெரிவித்தார். ஆனால், நானோ "இல்லை. இது என்னுடைய கேட்ச் தான்" என கூறினேன்' என்று ஹபீஸ் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பகர் சமான், 'உங்களுடைய கேட்ச் என்று தானே நீங்கள் கூறினீர்கள். ஆனால், அது என்னுடைய கேட்ச் என என் மனதுக்குள்ளே நான் கூறிக் கொண்டேன்' என நக்கலாக தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு, ஹபீஸ் மற்றும் பகர் சமான் ஆகியோர், ஜாலியாக பேசிக் கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Profile Pic

இவை அனைத்தையும் விட, கேட்ச் தவற விடும் இந்த புகைப்படத்தை, தன்னுடைய ட்விட்டரின் 'Profile Pic' ஆகவும் பகர் சமான் மாற்றி வைத்துள்ளார். இதுவும், கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

"தோனியோட வெறித்தனமான ரசிகன் நான்.." சிஎஸ்கே டீம்'ல ஆடணும்.." 'குழந்தை' போல ஆசைப்படும் இளம் வீரர்.. தட்டித் தூக்குமா சென்னை?

PSL FAKHAR ZAMAN, MOHAMMED HAFEEZ, DROPS CATCH, சீனியர் வீரர்கள், கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்