‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னை விமர்சித்த ரசிகருக்கு மிதாலி ராஜ் தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் 20 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தினர். இதில் சச்சின் டெண்டுல்கரின் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி நன்றி தெரிவித்திருந்தார். அதில் ஒரு ரசிகர், "வாழ்த்துக்கள் தமிழச்சி" எனக் கூறியுள்ளார். அதற்கு இன்னொரு ரசிகர், “இவருக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் மட்டும்தான் பேசுவார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மிதாலி ராஜ், “தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் எல்லா பதிவுகளிலும் என்னைக் குறை கூறுகிறீர்கள். இதுபோன்ற விமர்சனங்கள்தான் என்னை வளர்க்கிறது ” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்’ ‘ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா போட்டிபோட்டு கேட்ச் பிடிப்பாங்க போல’ வைரல் வீடியோ..!
- ‘பேட்டிங் செய்யும்போது ரபாடா என்ன கிண்டல் பண்ணாரு’.. ஆனா..! உண்மையை உடைத்த பிரபல இந்திய வீரர்..!
- ‘அவசரப்பட்டு ரபாடா பண்ண ஒரு செயல்’ ‘சிரிச்சு கலாய்த்த கோலி’.. வைரலாகும் வீடியோ..!
- ‘விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லி’.. ‘தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட சாஹல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- ‘ஜஸ்ட் மிஸ்’ ‘ஹெல்மெட்டில் அடித்து பறந்த பந்து’.. வைரலாகும் வீடியோ..!
- 'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'!