தடை விதித்த ஆஸ்திரேலியா... கொதித்த செர்பியா மக்கள்!- டென்னிஸ் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகின் டாப் நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்த நாடு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து ஜோகோவிச்சின் தாய் நாடான செர்பியாவில் அவருக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர்.

தடை விதித்த ஆஸ்திரேலியா... கொதித்த செர்பியா மக்கள்!- டென்னிஸ் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம்!
Advertising
>
Advertising

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் வருகிற ஜனவரி 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆன நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்து இறங்கினார். செர்பியாவைச் சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் இதுவரையில் 9 முறைகள் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரைக் கைப்பற்றி உள்ளார்.

protest in serbia in support of novak djokovic against australia

இவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என ஆஸ்திரேலியா நாட்டுக்குள் இவரை அனுமதிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா டென்னிஸ் சம்மேளனம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், முறையான சான்றிதழ்கள் இல்லை என ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஜோகோவிச்சுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. இதனால் நீண்ட நேரமாக அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உடன் விமான நிலையத்திலேயே காத்திருந்த ஜோகோவிச் தற்போது தனது நாடான செர்பியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக செர்பியா நாட்டு மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றம் முன்னர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் என்றும் அந்நாட்டு மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஜோகோவிச்சின் தந்தையும் ஆதரவு அளித்துப் போராடி வருகிறார்.

PROTEST, நோவாக் ஜோகோவிச், டென்னிஸ், செர்பியா, ஆஸ்திரேலியா, NOVAK DJOKOVIC, TENNIS, AUSTRALIA, SERBIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்