அன்னைக்கி 'தோனி' சொன்ன விஷயத்த.. என் 'வாழ்நாள்' முழுக்க மறக்க மாட்டேன்.." நெகிழ்ந்த 'இளம்' வீரர்.. "பையன் வெறித்தமான 'தோனி' ஃபேன் போல!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த டி 20 தொடரின் மூலம், பல இளம் வீரர்களின் திறமை, வெளியே தெரியவும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

அதே போல, இந்த சீசனிலும் சில இளம் வீரர்கள், தங்களது வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக, 20 வயதான இளம் வீரர் பிரியம் கார்க் (Priyam Garg) அறிமுகமாகி இருந்தார்.

கடந்த ஆண்டு 19 வயது உட்பட்டோருக்கான உலக கோப்பைத் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக, பிரியம் கார்க் செயல்பட்டு, அந்த தொடரின் இறுதிப் போட்டி வரை இந்திய அணியைக் கொண்டு சென்றார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அடித்த அரை சதம், அதிகம் பேசுப் பொருளாகியிருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை இளம் வீரர் பிரியம் கார்க் பகிர்ந்துள்ளார். 'என்னுடைய சிறு வயது முதலே, நான் தோனியை பின்பற்றி வருகிறேன்.


அவரது கேப்டன்சி ஆனாலும், பேட்டிங் ஆனாலும் நான் அதனை மிகவும் உன்னிப்பாக கவனித்து வளர்கிறேன். அவரது பேட்டிங் மற்றும் போட்டியை வென்று கொடுத்த ஆட்டங்களின் வீடியோக்களை கண்டு, அதன் மூலம் எனது பேட்டிங்கை நான் மேம்படுத்தியுள்ளேன்.

அவரை நேரில் பார்த்தது என்பது, கனவு நிஜமான தருணமாக அமைந்தது. சென்னை அணிக்கு எதிராக நான் ஆடியதை பார்த்து, நான் சிறப்பாக ஆடியதாக என்னை பாராட்டினார். அப்போது அவர், கேப்டன்சி குறித்து பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.


"எப்போதும் பிட்னஸ்ஸாக இருப்பது தான், நீங்கள் எத்தனை நாட்கள் கிரிக்கெட் ஆட முடியும் என்பதை தீர்மானிக்கிறது. அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" எனக் கூறினார். அவரிடம் இருந்து கிடைத்த அறிவுரைகளை நிச்சயம் நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்' என பிரியம் கார்க் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அதே போல, தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் பிட்னஸ்ஸுடன் இருக்க வேண்டும் என்பதையே அறிவுறுத்தியதாக பிரியம் கார்க் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்