'எந்த இந்திய வீரர்களும் செஞ்சு காட்டாத அசாத்திய ரெக்கார்ட்...' மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கா...? - கெத்து காட்டிய இளம்வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது இந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி 4-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம் 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் அடித்துள்ளது. அதன்பின் ஆடிய மும்பை 41.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து வென்றது.

                                      

குறிப்பாக மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா, இந்த கிரிக்கெட் தொடரில் மட்டும் மொத்தமாக 827 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை விஜய் ஹசாரே கோப்பையில் தனியொரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும்.

21 வயது இளம் வீரரான பிரித்வி ஷா, நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்னரே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பிரித்வி ஷா இடம்பெற்றிருந்தாலும் அங்கு அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

                                     

தற்போது விஜய் ஹசாரே போட்டியில் 4 சதங்கள் அடித்துள்ள பிரித்வி ஷா இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்