'ஊக்கமருந்து சர்ச்சை... கரியர் காலியாகும் அபாயம்'!.. 'அது மட்டும் நடக்கலனா'... இருண்ட நாட்கள் குறித்து பிரித்வி ஷா ஓபன் டாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடைத்து பேசியுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெற்றுள்ளார். ஷிகர் தவான் தலைமை தாங்கும் அந்த அணியின் கோச்சாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்து பிரித்வி ஷா முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு பிரதான காரணமாக ஒரு சம்பவம் அப்போது நடந்திருந்தது. 2019-இல் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட காரணத்திற்காக எட்டு மாத காலம் கிரிக்கெட் விளையாட பிரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தற்போது பிரித்வி ஷா பேசுகையில், "எனக்கு ராகுல் டிராவிட் சார் போன் செய்து, இது வாழ்க்கையில் சகஜமான ஒன்று. இதில் உன்னுடைய தப்பு எதுவும் இல்லை. நிச்சயம் நீ வலுவான கம்பேக் கொடுப்பாய் என அப்போது எனக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். அது நன்றாக இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்