செல்ஃபி பெயரில் வந்த வினை?.. பிரித்வி ஷா சென்ற கார் மீது நடந்த தாக்குதல்?.. அதிர்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ப்ரித்வி ஷா. மிக இளம் வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை பிரித்வி படைத்திருந்தார். அறிமுகமான முதல் ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை போட்டியிலேயே சதமடித்து ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தவர்.

                                   Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் பிரித்வி ஷா. அதில் இந்தியா கோப்பையையும் வென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணியில் ஆடும் வாய்ப்பையும் பெற்றிருந்த பிரித்வி ஷா, சமீப காலமாக உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால், சர்வதேச அணியில் சிறந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் வேதனையுடனும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரித்வி ஷா சென்று திரும்பிய போது அவருக்கு ஏற்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே பிரித்வி ஷாவை பார்த்த ஒரு சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

முதலில் பிரித்வி ஷா செல்ஃபி எடுத்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் திரும்பவும் வந்து செல்ஃபி எடுக்க கேட்டு வற்புறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த முறை பிரித்வி ஷா மறுத்துள்ள சூழலில், அவர்கள் மீண்டும் வற்புறுத்தியதன் காரணமாக உணவக மேலாளர்களை அழைத்து இது பற்றி பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் செல்ஃபி எடுக்க கேட்டுக் கொண்டவர்களை எச்சரித்த சூழலில் அது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners

இந்த சம்பவம் நடந்து நீண்ட நேரத்திற்கு பின்னர், அந்த ஹோட்டலில் இருந்து பிரித்வி ஷா வெளியே வந்த போது, செல்ஃபி எடுக்க கேட்டுக் கொண்டவர்கள் அங்கே நின்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் பிரித்வி ஷாவின் நண்பரின் காரை உடைத்து அவர்கள் சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழலும் உருவாகி இருந்தது. தொடர்ந்து, போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில், அவர்கள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners

இளம் கிரிக்கெட் வீரரை சுற்றி மும்பையில் வைத்து நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணி உள்ளது.

PRITHVI SHAW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்