"ஐபிஎல் 'ஹிஸ்டரி'லேயே முதல் 'ஓவர்'ல யாரும் இப்படி ஒரு சம்பவம் செஞ்சதில்ல.." 'ருத்ர' தாண்டவம் ஆடிய 'பிரித்வி ஷா'.. கதிகலங்கி நின்ற 'KKR'.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா (Prithvi Shaw), ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரில், கடுமையாக சொதப்பியிருந்தார்.

இதன் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக பிரித்வி ஷா தேர்வாகவில்லை. அடுத்த சச்சின் என கூறப்பட்ட பிரித்வி ஷா, பேட்டிங்கில் அதிகம் தடுமாற்றம் கண்ட நிலையில், சில விமர்சனங்களையும் சந்தித்திருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில், மும்பை அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, மொத்தமாக 827 ரன்கள் குவித்து பட்டையைக் கிளப்பியிருந்தார். விஜய் ஹசாரேவின் ஒரு தொடரில், தனிநபர் அதிகபட்ச ரன்னாகவும் இது பதிவானது.

இந்த தொடரை மும்பை அணி தான் கைப்பற்றியிருந்தது. இந்த தொடருக்கு பிறகு, இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பிரித்வி ஷா ஆடி வருகிறார். இதில், டெல்லி அணி பங்கேற்ற முதல் போட்டியில் இருந்தே, சிறப்பாக ஆடி வரும் பிரித்வி ஷா, 7 போட்டிகளில் விளையாடி, 3 அரை சதங்களுடன் 269 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில், கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில், 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி ஆடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் இளம் வீரர் ஷிவம் மாவி (Shivam Mavi) வீசினார். இந்த ஓவரில் முதல் பந்து வைடு பாலாக செல்ல, அதன் பிறகு வீசிய 6 பந்துகளையும் பவுண்டரியாக மாற்றி அசத்தினார் பிரித்வி ஷா.

பல வேரியேஷன்களில் ஷிவம் மாவி பந்தினை வீசினாலும், மிகவும் சிறப்பான கிளாஸ் ஷாட்களை அடித்து அனைத்தையும் பவுண்டரிகளாக மாற்றினார் பிரித்வி. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில், இதற்கு முன்பாக ஒரு முறை தான், ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆடிய ரஹானே, பெங்களூர் அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்திருந்தார்.

 

அதன்பிறகு, தற்போது தான் ஒரே ஓவரில், 6 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் சிறப்பான சாதனை ஒன்றையும் பிரித்வி ஷா படைத்துள்ளார். அதாவது, ஒரு ஐபிஎல் போட்டியின் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.




 

 

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில், 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்த டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பிரித்வி ஷா, 41 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.



 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்