Video : 'இளம்' வீரரின் செயலால்... கடுப்பான 'ரோஹித் ஷர்மா'... "இருக்குற 'பிரச்சனை'ல இது வேறயா?..." பரபரப்பு 'பின்னணி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் 108 ரன்கள் எடுத்து அவுட்டானார். இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் இதுவரை 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மார்னஸ் பந்தை அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது மாற்று ஃபீல்டராக நின்ற ப்ரித்வி ஷா கைக்கு பந்து சென்ற நிலையில், அதனை அவர் பந்து வீச்சாளரிடம் வேகமாக வீசினார். ஆனால், அதனிடையே ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மா மீது பட்ட பந்து அவரை சற்று பலமாக தாக்கியது.

இதனால் ரோஹித் ஷர்மாவின் முகம் மாறிப் போயிருந்த நிலையில், ப்ரித்வி ஷாவிடம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. தற்போது இது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே இந்திய வீரர்கள் பலர் காயத்தால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்