'புவனேஷ்வருக்கு' பதிலா இனிமே ஆட போறது இவரு தான்... "அவர மாதிரியே 'மாஸ்' பண்ணுவாரா??.." எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய போது பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் பந்து வீசாமலே போட்டியின் பாதியில் இருந்து விலகினார். புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து விலகியுள்ளது சன் ரைசர்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரித்வி ராஜ் யார்ரா (Prithvi Raj Yarra) என்பவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிரித்வி ராஜ் யார்ரா, 11 முதல் தர போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விரைவில் அவர் ஹைதராபாத் அணியுடன் இணையவுள்ளார் என தெரிகிறது. இவர் இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்