பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது.. தமிழகத்தில் விருது வென்ற மேலும் 3 பேர் யார்?.. முழு விவரம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமண நிகழ்ச்சியில்.. உற்சாகமா ஆடிட்டு இருந்த மனுஷன்.. ஒரு செகண்ட்ல நடந்த விபரீத சம்பவம்.. பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!

அதன் படி, இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் கேல் ரத்னா விருதுக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் தேர்வாகி இருந்தார்.

அதே போல, அர்ஜுனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கடலூரை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்களுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜெகபதி திரௌபதி முர்மு, வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த சரத் கமல், பிரக்ஞானந்தா, இளவேனில், ஜெர்லின் அனிகா உள்ளிட்டோரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு கையில் இருந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Also Read | Zombie Virus : 48,500 ஆண்டுகள் உறைந்து போயிருந்த ஜாம்பி வைரஸ்??.. புத்துயிர் அளித்த விஞ்ஞானிகள்??.. உலக அளவில் பரபரப்பு!

PRESIDENT DROUPADI MURMU, PRESENT, ARJUNA AWARDS, PRAGGNANANDHAA, ILAVENIL, SARATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்