'இந்த பையனுக்கு உள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்'!.. 'இது' எவ்ளோ பெரிய விஷயம்!.. 'இந்திய அணியின் பவுலிங்கையே புரட்டி போட முடியும்'!!.. ஏன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, இன்னொரு பும்ரா போல வர முடியும் என கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் ஏன் அப்படி கூறினார் என்பதை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக பல இளம்வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். அப்படி அறிமுகமான அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா மிக அபாரமாக பந்து வீசிய அனைவரது கவனத்தையும் பெற்று உள்ளார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரசித் கிருஷ்ணா மொத்தமாக 151 பந்துகளை வீசி இருக்கிறார்.
அதில் 177 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புது பந்தில் சரியாக வீசாத போதிலும் ஆட்டம் போகப்போக மிக அற்புதமாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடர் முழுவதும் நல்ல பெயரை பெற்று உள்ளார்.
இந்நிலையில், பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், பிரசித் கிருஷ்ணா மிக அற்புதமாக பந்து வீசுகிறார். அவரது வேகம் மிக அபாரமாக இருக்கிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இது ஒரு அறிமுக தொடரில் மிகப் பெரிய விஷயமாகவே நான் பார்க்கிறேன்.
எனவே, பிரசித் கிருஷ்ணாவை நன்கு தயார் படுத்தி ஜஸ்பிரித் பும்ராவைப் போல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளிலும் கிருஷ்ணாவை ஆட வைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரசித் கிருஷ்ணா, இந்த தொடர் முழுவதும் புதிய பந்தில் நான் வீசிய பந்துகள் அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கிறது அதை ஒத்துக் கொள்வேன். மிக தவறான லைனில் பந்து போட்டதை அடுத்து நான் அதிக ரன்களை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதை நான் வருகிற காலங்களில் சரி செய்து ஆரம்பம் முதலே நன்றாக பந்துவீச முயற்சிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலி - ரோகித் பனிப்போர் பஞ்சாயத்து ஆனது 'இப்படி' தான்!.. LEAK ஆனது ரகசியம்!.. 'என் friend-அ போல யாரு மச்சான்?.. trend-அ எல்லாம் மாத்தி வச்சான்!'
- 'இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல...' அது எப்படிங்க எல்லா பந்தும் சிக்ஸர் அடிக்க முடியும்...? - இளம் வீரருக்கு சப்போர்ட் செய்த ஆகாஷ் சோப்ரா...!
- ‘திடீரென டிரெண்ட் ஆகும் ஷர்துல் தாகூர்’!.. அதுக்கு காரணம் அந்த ஒரே ஒரு ‘போட்டோ’ தான்..!
- 'அவரு தோனியவே மிஞ்சிடுவாரு!.. கில்க்ரிஸ்ட்ட ஓரம் கட்டிருவாரு'!.. பங்காளி சண்டையை மறந்து... இந்திய அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
- 'யாரு ஜெயிச்சாங்க... யாரு தோத்தாங்க... அது முக்கியம் இல்ல'!.. அடுத்து யாரு ஜெயிக்கப் போறாங்கனு... இவங்க 2 பேரும் சொல்லாம சொல்லிட்டாங்க!.. போட்றா விசில!
- அம்பயர்ஸ் அட்ராசிட்டிஸ் முடிவுக்கு வந்தாச்சு!.. புதிதாக 2 விதிகளை அறிமுகப்படுத்திய பிசிசிஐ!.. 'அப்போ இனிமே யாரும் அம்பயர் கிட்ட சண்ட போட மாட்டங்களா'!?
- 'ஏன் சார் உங்கள இந்திய அணி டி20ல எடுக்கல'?.. ரசிகர்களின் மனங்களை கலங்கடித்த ஷிகர் தவானின் உருக்கமான பதில்!.. நெகிழ்ச்சி சம்பவம்!!
- VIDEO: ‘இந்த வருசம் இந்த ரெக்கார்டுக்கு தான் சீசன் போல’!.. அம்பயர் கையை UP-லயே இருக்க வச்சிட்டாரு மனுசன்..!
- "என்னோட டார்கெட்டே வேற மா"... 'அப்போ 2 வருஷமா... இந்த பிளான்-ஐ தான் போட்டு வச்சிருந்தாரா?"... 'ரொம்ப thanks புவி'!!
- ‘விடாமுயற்சி இருந்தா உங்களுக்கு அது கிடைக்கும்’!.. வெற்றிக் கோப்பையுடன் ‘நடராஜன்’ பதிவிட்ட உணர்ச்சிகரமான பதிவு..!