"ஆத்தி, அது நம்மள நோக்கி தான் வருது.." தவறி விழுந்த 'Boult'... பதறிய வீரர்கள்.. கடைசியில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி கண்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம்சன் 54 ரன்கள் எடுத்திருந்தார். கடைசியில், ஹெட்மயர் அதிரடி காட்ட, 150 ரன்களை ராஜஸ்தான் தாண்டியது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
'RR' அணியை வீழ்த்திய 'KKR'
கடைசி கட்டத்தில், நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைக்க, கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 48 ரன்கள் எடுத்திருந்தார். மறுபக்கம் 23 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு சிங், ஆட்ட நாயகன் விருதினை பெற்றிருந்தார்.
விமர்சனத்தை சந்தித்த முடிவுகள்
தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து வந்த KKR, தற்போது வெற்றி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும், இந்த போட்டிக்கு நடுவே நடுவர் எடுத்திருந்த சில முடிவுகளும், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
போல்ட்டை தாக்கிய பந்து..
இந்நிலையில், போட்டிக்கு நடுவே நடந்த மற்றொரு சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தொடங்கிய பிறகு, 3 ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசி இருந்தார். இந்த ஓவரின் முதல் பந்தினை பாபா இந்திரஜித் எதிர்கொள்ள, அதனை மிட் ஆன் திசையில் அவர் அடித்து விட்டு வேகமாக ரன் ஓடினார்.
அப்போது, அங்கு நின்ற பிரஷித் கிருஷ்ணா, பந்தினை வேகமாகி எடுத்து நேராக ஸ்ட்ரைக்கர் திசையில் வீசி, ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால், பிரஷித் வீசிய பந்து, நடுவே நின்ற பந்து வீச்சாளர் போல்ட்டை பதம் பார்த்தது. அவரும் பந்து வரும் வேகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்து துள்ளி முடிவதற்குள், பந்து அவர் மீது பட்டு விட்டது.
இதனை பயன்படுத்தி மற்றொரு ரன்னையும் கொல்கத்தா அணி வீரர்கள் எடுத்து விட்டனர். இதன் காரணமாக, போல்ட் மீது பெரிய அளவில் காயம் ஒன்றும் ஏற்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகமாக வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஜாம்பவான்’ சச்சின் சாதனையை சமன் செஞ்ச CSK ப்ளேயர்.. 12 வருசத்துக்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!
- IPL2022: மீண்டும் தோனியின் Captaincy… ஜடேஜா முடிவு சரியா..? - CSK எதிர்காலம் எப்படி இருக்கும்? - ரசிகர்கள் கருத்து
- CSK'வில் பயிற்சியை தொடங்கிய 'குட்டி' மலிங்கா.. உச்சகட்ட Waiting'ல் ரசிகர்கள்.. வைரலாகும் 'வீடியோ'
- அவுட் கேட்ட பவுலர்.. சைலண்டாக நின்ற 'Umpire'.. மறுகணமே நடந்த சம்பவம்.. "ப்பா, மனுஷன் நெஜமாவே வேற லெவல் தான்.."
- சாலை விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்.. "அய்யய்யோ, என்ன ஆச்சு,. இப்போ எப்படி இருக்காங்க??"
- "அம்மாடியோவ்.. இப்டி ஒரு ரன் அவுட்'ட பாத்ததே இல்ல.." பேர்ஸ்டோவின் மிரட்டலான 'Throw'.. உறைந்து போன கிரிக்கெட் ரசிகர்கள்
- "என்ன ஜோக் காட்டுறீங்களா??.." சேவாக் சொன்னத கேட்டு சிரிச்ச வார்னர்.. "ஆனா, இன்னைக்கி கதையே வேற.."
- "இறந்து போன என் அப்பாவுக்காக.." முக்கிய விக்கெட்டை எடுத்ததும்.. மைதானத்தில் இளம் வீரர் செய்த விஷயம்.. உருகிய ரசிகர்கள்
- “அவர் எனக்கு அண்ணன் மாதிரி”.. பாசமழையை பொழிந்த குல்தீப்.. யாரை சொல்றார்ன்னு தெரியுதா..?
- “ரஸல் இருக்கும்போது தேவையில்லாம அவருக்கு ஏன் அந்த வேலை கொடுக்குறீங்க?”.. KKR-ஐ விட்டு விளாசிய கவாஸ்கர்..!