ரொனால்டோவை விளையாட அனுமதிக்காத பயிற்சியாளர்.. அணி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..! FIFA2022

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோசை அணியில் இருந்து நீக்கியுள்ளது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு.

Advertising
>
Advertising

Also Read | Life-ல முதல் தடவை பனியை பார்த்த ஒட்டகம்.. குஷியில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.

முன்னதாக இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ பெஞ்சில் அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தென் கொரியா உடனான போட்டியில் ரொனால்டோவிற்கு பதிலாக ராமோஸ் உள்ளே விளையாடினார். அதில் அவர் ஹாட்ரிக் கோல் அடிக்க 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றிபெற்றது. அப்போது, ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்தது குறித்து பேசிய சாண்டோஸ் தனக்கு சரியென தோன்றியதை செய்ததாக தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு, காலிறுதி போட்டியில் மொரோக்கோ அணியை எதிர்த்து விளையாடியது போர்ச்சுக்கல். இதிலும் சப்ஸ்டிடியூட் வீரராக ரொனால்டோ இருந்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே மொரோக்கோ 1 கோல் அடித்த நிலையில், கடைசி வரையில் போர்ச்சுக்கலால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1- 0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேறியது.

இந்நிலையில், போர்ச்சுக்கல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோசை அணியில் இருந்து நீக்கியுள்ளதாக போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் சாண்டோஸ் 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கால்பந்து உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | சிசிடிவி கேமராவில் டம்ளர்.. டாஸ்மாக் சுவத்துல ஓட்டையை போட்டு ஆட்டை.. யாருசாமி இவங்க.?

PORTUGAL MANGER, PORTUGAL MANGER LEAVES TEAM, MOROCCO, FIFA2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்