ஃபைனல் மேட்ச் ஒரு பக்கம்! ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம்!’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்?’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக்கொள்ள மும்பை அணி ஒருபுறம் திட்டமிட, இன்னொரு புறம் ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடக்க தொடங்கிவிட்டது.

வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள, இந்த ஏலத்தை அடுத்து, ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட கூடிய முக்கிய வீரர்களை அடுத்த வருட சீசனில் கொத்தாக தூக்கிக் கொள்ள சிஎஸ்கே அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியே விடும் வீரர்களை அணியில் எடுத்து அவர்களை வைத்து கோப்பையை வெல்லும் திறமை கொண்டதாக கூறப்படும் சிஎஸ்கே அணியில், ஹர்பஜன், அம்பதி ராயுடு, பிராவோ போன்ற வீரர்கள் என ஒரு காலத்தில் மும்பை அணியில் விளையாடிய வீரர்கள் எடுக்கப்பட்டதும், வெளிநாட்டு வீரர்களும் கூட இரண்டு அணிக்கும் மாறி மாறி விளையாடி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அடுத்த சீசனிலும் மும்பை அணிக்கு சிஎஸ்கே செக் வைக்க போகிறது என்று கூறுகிறார்கள். அடுத்த ஏலத்தில் மும்பை அணி 5 வீரர்களை ரீ டெயின் செய்து தக்க வைக்க முடியும். அதன்படி மும்பை அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா,டி காக் அல்லது போல்ட் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள் என்றும், இதர வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள் என்றும் அவர்களுள் ராகுல் சகார்,  இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ், கிரிஸ் லைன், பாட்டின்சன் ஆகியோரை மட்டுமல்லாது, இப்போது மும்பை அணியில் ஆடாமல் பெஞ்சிங்கில் இருக்கும் பல வீரர்களை சிஎஸ்கே அடுத்த வருடம் தூக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்