'கோலி' வந்ததும் 'பொல்லார்ட்' போட்ட ஸ்கெட்ச்.. கொஞ்சம் கூட அசராத விராட்.. "கிங்'யா எங்காளு"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது டி 20 தொடரில் மோதி வருகிறது.

Advertising
>
Advertising

முன்னதாக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொண்ட ஒரு நாள் தொடரை, இந்திய கிரிக்கெட் அணி, 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.

தொடர்ந்து, முதல் டி 20 போட்டியிலும், இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, தற்போது நடைபெற்று வருகிறது.

ரிஷப் பண்ட் அதிரடி

இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்திருந்தது. அதன்படி, ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலி 52 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், கடைசியில் கைகோர்த்த ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர், அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம்

இதில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 28 பந்துகளில், 7 பவுண்டரிகள்  மற்றும் ஒரு சிக்சருடன், 52 ரன்கள் எடுத்திருந்தார். வெங்கடேஷ் ஐயர், 18  பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆடி வருகிறது.

பொல்லார்ட் போட்ட ஸ்கெட்ச்

இதனிடையே, கடந்த ஒரு நாள் தொடரில், அதிகம் விமர்சனத்தை சந்தித்த விராட் கோலி, இன்றைய டி 20 போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்நிலையில், கோலி பேட்டிங் செய்ய வந்த போது, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட், அவரை நெருக்கடிக்குள் ஆக்க, ஒரு Attacking பீல்டு செட் அப்பினை உருவாக்கினார்.

அசராத கோலி

சுற்றி ஏங்கிலும் பீல்டர்கள் நிற்க, சுழற்பந்து வீச்சினை எதிர்கொண்ட கோலி, சற்றும் அசராத வகையில் ஆடினார். டிவில்லியர்ஸ் அடிக்கும் ஷாட்டினை பயன்படுத்தி, அதே ஓவரில், 2 பவுண்டரிகளை ஓட விட்டார். பார்மில் இல்லாத கோலியை, ஆரம்பத்திலே நெருக்கடி கொடுத்து, சுழற்பந்து வீச்சினால் காலி செய்து விடலாம் என எதிர்பார்த்த பொல்லார்ட், கோலியின் பவுண்டரிக்கு பிறகு, விரக்தியுடன் நிற்கும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

அதே போல, ஒரு நாள் தொடரில் மோசமாகி ஆடினாலும், தற்போது சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தியுள்ளதால், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

VIRATKOHLI, POLLARD, IND VS WI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்