VIDEO: ‘ஹலோ ப்ரதர் கொஞ்சம் அங்க பாருங்க’!.. தவானை ‘வார்னிங்’ பண்ணிய பொல்லார்டு.. இதை யாராவது நோட் பண்ணீங்களா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஷிகர் தவானை மும்பை வீரர் பொல்லார்டு எச்சரிக்கை செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 13-வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இளம்வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியால், 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் ஓவரில் மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகள் முழுவதும் சரிந்தன. அவரது ஓவரில் கேப்டன் ரோஹித் ஷர்மா (44 ரன்கள்), ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2 ரன்) மற்றும் இளம்வீரர் இஷான் கிஷான் (26 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
டெல்லி அணி வெற்றி பெற குறைவான இலக்கே நிர்ணயிக்கப்பட்டதால், ஆரம்பம் முதலே ரன்கள் கட்டுப்படுத்து வேலையில் மும்பை அணி இறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த கூட்டணி பிரிக்க மும்பை அணி பல்வேறு சோதனைகளை முயற்சி செய்தது. ஆனாலும் அவர்களை அவுட்டாக்க முடியவில்லை. இதனை அடுத்து பொல்லார்டு ஓவரில் ஸ்டீவன் ஸ்மித்தும் (33 ரன்கள்), ராகுல் சாகர் ஓவரில் ஷிகர் தவானும் (45 ரன்கள்) அவுட்டாகினர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்னில் அவுட்டானாலும், லலித் யாதவ் (22 ரன்கள்)-ஹெட்மெயர் (14 ரன்கள்) ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 19.1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இப்போட்டியில் தவானை, பொல்லார்டு மான்கட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 10-வது ஓவரை மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு வீசினார். அப்போது அவர் பவுலிங் செய்ய ஓடி வந்தபோது, நான் ஸ்ட்ரைக்கில் நின்ற தவான்,க்ரீஸை தாண்டி சென்றிருந்தார். உடனே பந்துவீசுவதை நிறுத்திய பொல்லார்டு, க்ரீஸ் லைனை கை காண்பித்து தவானை மான்கட் எச்சரிக்கை செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். அது அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ‘பும்ரா’ தான் இன்னைக்கு டிரெண்டிங்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன பண்ணார்..?
- ‘சிஎஸ்கே வீரர் சொன்ன அதே காரணம்’!.. திடீரென விலகிய முக்கிய வீரர்.. ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை..!
- அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லி இருந்தார் தோனி..?
- ‘டீமோட இதய துடிப்பே அந்த 2 பேர்தான்’.. ‘அவங்க மட்டும் அவுட்டாகிட்டா, ICU-ல இருக்குற மாதிரிதான் டீம் இருக்கும்’.. கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
- VIDEO: ‘அது எப்படி பாஸ்’!.. ‘எந்த பக்கம் திரும்பினாலும் நீங்கதான் தெரியுறீங்க’!.. ஜடேஜா செஞ்ச ‘தரமான’ சம்பவம்..!
- ‘24 வயசுலயும் சரி இப்பவும் சரி, அதுக்கு மட்டும் உத்தரவாதம் கொடுக்கவே முடியாது’!.. வெளிப்படையாக பேசிய ‘தல’ தோனி..!
- 'பாகுபலிக்கு ஒரு கட்டப்பா!.. சிஎஸ்கேவுக்கு நான் தான் பா'!.. சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் முதுகெலும்பாக மாறும் வீரர்!.. அப்படி என்ன செய்தார்?
- VIDEO: இது என்னய்யா ‘வித்தியாசமான’ ஆசையா இருக்கு.. மறுபடியும் ‘அதே’ மாதிரி செஞ்ச சஞ்சு சாம்சன்..!
- ‘நேத்து மறைமுகமா இந்த மெசேஜ்-அ தான் தவான் சொல்லிருக்காரு’!.. அப்போ அவருக்கு ‘ஆப்பு’ தானா..? நெட்டிசன்கள் கேள்வி..!
- திடீரென ‘கேப்டன்’ பொறுப்பை அவர்கிட்ட ஏன் கொடுத்தீங்க?.. ‘முதல்முறையாக’ மனம் திறந்த தினேஷ் கார்த்திக்..!