'பொல்லாத ஆளு சார்.. இந்த பொல்லார்டு'.. 'என்னா ஒரு வில்லத்தனம்'.. 'வேற லெவல் சமயோஜிதம்' .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்கிற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஒவரில் 249 ரன்கள் அடித்ததைத் தொடர்ந்து 250 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர் ஷாய் ஹோப் கடைசி வரை களத்தில் நின்று ஆடி, சதமடித்ததால் இந்த இலக்கினை அந்த அணி எட்டியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு அவர் காரணமாக இருந்தார்.
இப்போட்டியின் 5வது ஓவரின் முதல் பந்தை பொல்லார்டு வீசும்போது, க்ரீஸை தாண்டி காலை வைத்துவிட்டார். இதனால் அம்பயர் நோ பால் கொடுப்பதற்கா தயாரானார். ஆனால் அதற்குள் அம்பயரின் கை அசைவுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ட பொல்லாத பொல்லார்டு, உடனே தன் வியூகத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். ஆம், அவர் அந்த பந்தை வீசவே இல்லை.
இதனால் அம்பயர் அந்த பால், டெட் பால் என அறிவிக்கவேண்டியதாயிற்று. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கேப்டன் ஆன மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் ப்ளேயர்’.. இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறி பரபரப்பை கிளப்பிய சிஎஸ்கே வீரர்..!
- இந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்..! வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..!
- ‘தனித்தனியா இருக்கும்போதே தாறுமாறு, இப்போ ஒன்னா சேர்ந்தா’.. உலக்கோப்பையை கலக்க வரும் சிஎஸ்கே, மும்பை அணியின் அதிரடி வீரர்கள்!
- 'இதுதான்யா கொண்டாட்டம்’.. ஜெயிச்ச கையோட பர்த்டே கொண்டாடிய வீரர்.. வைரல் வீடியோ!
- “அட சோனமுத்தா போச்சா”!.. ‘எப்பா பொல்லார்டு கடைசில இப்டி ஆகிடுச்சே’!.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!
- ‘ஸ்டெம்பை விட்டு விலகி பேட்டிங் செய்ய முயற்சித்து சர்ச்சையை கிளப்பிய பொல்லார்ட்’.. பரபரப்பில் முடிந்த கடைசி ஓவர்!
- ஒரு பவுண்ட்ரிய தடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்க்கா..! வேற லெவல் ஃபீல்டிங் செய்து மாஸ் காட்டிய மும்பை வீரர்!
- ‘திரும்பி வரதுக்குள்ள இப்டி ஒரு அவுட்டா’.. ஏபிடியை மிரளவிட்ட பொல்லார்ட்’ வைரலாகும் வீடியோ!
- கெய்லை துரத்தும் பொல்லார்ட்.. என்னது இத்தனை சிக்ஸர்களா?
- ‘சீண்டிய பஞ்சாப்பை சின்னா பின்னமாக்கிய மும்பை’.. ராகுல் சதத்தை காலி செய்த பொல்லார்ட்!