‘14 வருசமாக யாருமே நெருங்காத ரெக்கார்ட்’!.. ‘வெறித்தனமான ஆட்டம்’.. யுவராஜ் செதுக்கிய சாதனை கோட்டையில் இடம்பிடித்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை எதிரான டி20 போட்டியில் 6 பந்துக்கு 6 சிக்சர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் அசத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஷன் டிக்வெல்லா, தனுஷா குணதிலகா களமிறங்கினர். இதில் குணதிலாக 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவுடன் ஜோடி சேர்ந்த டிக்வெல்லா அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் டிக்வெல்லா 33 ரன்களும், பதும் நிஷாங்கா 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை இலங்கை அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிம்மன்ஸ் 26 ரன்களிலும், இவின் லிவிஸ் 28 ரன்களிலும் அவுட்டாகினர். அப்போது 4-வது ஓவரை வீசிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா, ஹாட்ரிக் (லிவிஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன்) விக்கெட்களை வீழ்த்தி அதிரடி காட்டினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்சயா வீசிய 6-வது ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இதனால் 13.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதில் பொல்லார்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு, டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்துள்ளார்.

மேலும் ஒரே போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்