'ஹெலிகாப்டரில் இருந்து ஏரியல் வியூல...' 'சென்னை டெஸ்ட் மேட்ச்சை ரசித்த பிரதமர்...' - ட்விட்டரில் போட்டோ ஷேர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில் விமானம் மூலம் டெஸ்ட் போட்டியை ரசித்ததாக ட்வீட் செய்துள்ளார்.

இன்று காலை அரசுமுறை பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

இந்நிலையில் சேப்பாக்கம் வழியே சென்ற ஹெலிகாப்டரில் இருந்தபடியே, சேப்பாக்கம் அரங்கில் நடக்கும் சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை ரசித்ததாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்