CWG 2022: "சாம்பியன்களின் சாம்பியன்".. சாதனை படைத்த பிவி சிந்து.. பிரதமர் மோடி வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு காமன்வெல்த் தொடரின் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து.

Advertising
>
Advertising

Also Read | "Card மேலே இருக்க நம்பர் சொல்லுங்கோ மேடம்".. 4 லட்சம் அபேஸ்.. பக்கவா பிளான் போட்டு.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கும்பல்..!

காமென்வெல்த் 2022

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கியது.

முதல் தங்கப் பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யோ ஜியாவை வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 14ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் மைக்கேல் லீயை எதிர்த்து சிந்து விளையாடினார். ஆரம்பம் முதலே இருவருமே அதிரடி காட்ட மேட்ச் பரபரப்பாகவே சென்றது. இருப்பினும் சுதாரித்து ஆடிய சிந்து இறுதியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி 21-15, 21-13 என்ற நேர் செட்களில் லீயை வீழ்த்தி வெற்றி பெற்றார். இது காமன்வெல்த் போட்டியில் சிந்து பெறும் முதல் தங்கம் ஆகும். இதன்மூலம் இந்தியா தற்போது 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலத்துடன் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.

மோடி வாழ்த்து

இந்நிலையில், பிவி சிந்துவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"தனிச்சிறப்பு வாய்ந்த பிவி சிந்து சாம்பியன்களின் சாம்பியன். மேன்மை என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் மீண்டும் உலகிற்கு உணர்த்துகிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உறுதியும் பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுளளார்.

இதேபோல, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். .

Also Read | திடீர்னு உருவான துளை.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அடுத்த வாரமே இப்படி ஆகிடுச்சே.. பதறிப்போன மக்கள்..!

NARENDRAMODI, PV SINDHU, PM MODI, PM MODI LAUDS PV SINDHU, MAIDEN CWG GOLD, பிவி சிந்து, பிரதமர் மோடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்