“சிஎஸ்கே அணிக்கு இப்ப புரிஞ்சுருக்கும்!”.. “ப்ளீஸ்.. யாராச்சும் அந்த மனுசன திரும்ப அழைச்சுட்டு வாங்க!”.. கதறும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில்  சிஎஸ்கே அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது . முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்க்க,  சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்களில் சுருண்டது.

இதனால் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 5ல் தோல்வி, 2 போட்டிகளில் வெற்றி என மொத்தம் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னொருபுறம், சரியான பேட்டிங் இல்லை என்றும், பவுலர்களின் அதிரடி ஆட்ட திட்டங்களை எதிர்கொள்வதற்கான வியூகத்தை பேட்ஸ்மேன்கள் வகுக்கவில்லை என்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்ற சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இருந்து , சில காரணங்களால் இந்தியா திரும்பினார். அதன் பின் அவருடைய பெயர் சென்னை அணியின் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணி  5 போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து, இணையத்தில் ரசிகர்கள் சுரேஷ்ய் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து திரும்ப அழைக்கும் பதிவுகள் அதிகரித்துள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்