அதை 'அவர்'கிட்டேயே போய் கேளுங்க.. 'செம' கடுப்பில் கங்குலி.. 2 நாளைக்குள்ள.. அப்டி 'என்ன' நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அதை 'அவர்'கிட்டேயே கேளுங்க.. 'செம' கடுப்பில் கங்குலி.. 2 நாளைக்குள்ள.. அப்டி 'என்ன' நடந்துச்சு?

உலகக்கோப்பை போட்டிகளுக்குப்பின் தோனி இந்திய அணியின் எந்தவொரு போட்டியிலும் பங்கு பெறவில்லை. இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடர்களில் தோனியின் பெர்பாமன்ஸை பொறுத்தே இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தோனி குறித்து 2 நாட்களுக்கு முன் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, தோனி விவகாரத்தில் எல்லாம் தெளிவாக இருப்பதாகவும், தோனி-பிசிஐஐ இடையே வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் சமீபத்திய பிசிசிஐ கூட்டத்திற்கு பின் கங்குலி டொனி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விதம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிசிசிஐ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை கங்குலி சந்தித்து பேசினார். அப்போது,'' அப்போது தோனி 2௦20 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கங்குலி, "தயதுசெய்து இந்த கேள்வியை தோனியிடம் கேளுங்கள்" என்று கூறினார். 2 நாட்களுக்கு முன் எல்லாம் தெளிவாக இருக்கிறது என்று கூறிய கங்குலி தற்போது இப்படி பதில் அளித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இந்த 2 நாட்களில் எதுவும் பிரச்சினை எழுந்ததா? ஏன் இப்படிகங்குலி பேசினார்? என பல்வேறு  கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்தில் தோனியிடம் எதிர்கால திட்டம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஜனவரி வரை காத்திருங்கள் என்று பதிலளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்