IPL 2022 : விலகிய தீபக் சாஹர்.. அவருக்கு பதிலா CSK'வில் களமிறங்க வாய்ப்புள்ள வீரர்கள் லிஸ்ட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில், இதுவரை ஐந்து போட்டிகள் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அட, அதிபர் கிம் ஜாங் பண்ண விஷயமா இது??.." பெண் செய்தியாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ..

கடைசியாக, பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தான் அந்த அணி இதுவரை வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பெரிய அளவில் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை அணியின் அனுபவம் இல்லாத பந்து வீச்சு, தொடர் தோல்வியின் காரணம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

முன்னதாக, பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஏலத்தில், தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி எடுத்திருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரின் போது, தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்க முடியவில்லை. தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏப்ரல் மாதம் இறுதியில் சென்னை அணியில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால், மீண்டும் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்படவே, முற்றிலுமாக ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியல் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று வீரரை எடுக்க வாய்ப்பு?

அதிக தொகைக்கு சிஎஸ்கே எடுத்த வீரர் இப்படி விலகியுள்ளது, அந்த அணியின் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே, சிஎஸ்கே அணி தீபக் சாஹருக்கு மாற்று வீரராக யாரையாவது எடுக்குமா என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி எடுத்தால், ஏலத்தில் எந்த அணிகளும் கண்டு கொள்ளாத பந்து வீச்சாளர்கள் சிலரின் பெயரையும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்படி தீபக் சாஹருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே எடுக்க அதிக வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்பது பற்றி காணலாம்:

இஷாந்த் ஷர்மா

தீபக் சாஹர் ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம் தான் என்ற நிலை வந்ததும் ரசிகர்கள் அதிகம் குறிப்பிட்ட பெயர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தான். தீபக்கை போலவே, பந்தினை அதிகம் ஸ்விங் செய்யக் கூடியவர் இஷாந்த் ஷர்மா. கடந்த முறை டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த இஷாந்தை எந்த அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவால் குல்கர்னி

இஷாந்த் ஷர்மாவை தொடர்ந்து, அடுத்த வீரராக பார்க்கப்படுபவர் தவால் குல்கர்னி. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஆடியுள்ள குல்கர்னி, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளவர். மும்பை பகுதியை சுற்றியுள்ள மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால், மும்பையைச் சேர்ந்த குல்கர்னி, சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டி 20 போட்டியில் அறிமுகமான சந்தீப் வாரியார், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அந்த அணிக்காக, சையது முஷ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் உள்ளிட்டவற்றில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் போது, கொல்கத்தா அணிக்காக சந்தீப் வாரியார் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரையும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இவர்களைத் தாண்டி, இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் சிங், அர்சான் நக்வஸ்வாலா ஆகியோரை கூட சென்னை தேர்வு செய்ய முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Also Read | "நல்ல வேள அன்னைக்கி நான் செஞ்சுரி அடிக்கல.." சிரித்துக் கொண்டே சொன்ன சச்சின்.. இதுனால தான் அவரு 'லெஜெண்ட்'..

CRICKET, IPL 2022, CSK, DEEPAK CHAHAR, தீபக் சாஹர், ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்