‘அதை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு’!.. ‘உண்மையான ஹீரோ அவங்கதான்’.. போட்டி முடிந்தபின் ‘உருக்கமாக’ பேசிய மோரிஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கிறிஸ் மோரிஸ் நேற்று போட்டி முடிந்த கொரோனா பரவல் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 18-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது.

அதிகபட்சமாக ராகுல் திருப்பதி 36 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், ஜெயதேவ் உனத்கட், சேத்தன் சக்காரியா மற்றும் முஸ்தாஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தா அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். அதேபோல் ஜெய்ஸ்வால் (22 ரன்கள்), சிவம் தூபே (22 ரன்கள்) மற்றும் டேவிட் மில்லர் (24 ரன்கள்) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கிறிஸ் மோரிஸ், ‘இந்தியாவில் சில கொரோனா பரவல் அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. கொரோனா உயிரிழப்புகள் குறித்து கடந்த 2 நாட்களாக நாங்கள் பேசி வருகிறோம். இதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கும் முன்களப்பணியார்களின் சேவை மிகப்பெரியது. அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வரும் கடைமை எங்களுக்கு உள்ளது. வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் சரி, மக்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியையே தருகிறோம். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு’ என கிறிஸ் மோரிஸ் உருக்கமாக பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்