இல்ல 'பணத்துக்காக'த்தான் விளையாடுறீங்களா..? நீங்க உண்மையாகவே 'கிரிக்கெட்டை' நேசிச்சீங்கன்னா இதெல்லாம் பண்ண மாட்டீங்க... சேவாக் அதிரடி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் கலந்து கொண்டு பேசினார்.

அதில், கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற தவறான பாதையில் பயணிக்கக்கூடாது. அப்படி பயணித்தால் நீங்கள் இந்த விளையாட்டை விரும்பவில்லை என்று தான் அர்த்தம். பணத்துக்காகத் தான் நீங்கள் விளையாடுகிறீர்கள் எனலாம். சூதாட்டம் குறித்து யாராவது அணுகினால் வீரர்கள் அந்த விஷயம் குறித்து உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் புகார் செய்யாமல் தவிர்த்தால் அந்த சூதாட்ட தரகர் மற்றொரு வீரரை தொடர்பு கொள்ள வழிவகுத்தது போலாகி விடும்.

ஊக்க மருந்து விவகாரத்தில் வீரர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இளம் வீரர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற பிரச்சினை எழாமல் இருக்க வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆத்மாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கைவைக்கக்கூடாது. புதிய விஷயங்கள் மேற்கொள்ள வேண்டியது தான். அதற்காக டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கக்கூடாது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர முடியும். இவ்வாறு ஷேவாக் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்