‘வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது’.. செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் ஷர்மா பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது என்று இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது’.. செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் ஷர்மா பரபரப்பு கருத்து..!
Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று (17.11.2021) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Players are not machines, says Indian T20 captain Rohit Sharma

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Players are not machines, says Indian T20 captain Rohit Sharma

இந்த நிலையில் நேற்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வீரர்களின் ஓய்வு குறித்து பேசிய ரோஹித் ஷர்மா, ‘ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறோம். தற்போது நடைபெற உள்ள டி20 போட்டிகளும் ஒரு நாள் இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் நான்கு நாட்கள்தான் இடைவெளி உள்ளது.

அதனால் வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்க வீரர்கள் ஒன்றும் மெஷின் கிடையாது. அவர்களுக்கும் ஓய்வு தேவை. அப்போதுதான் புத்துணர்ச்சியுடன் அவர்களால் விளையாட முடியும். மனதளவில் உற்சாகமாக இருந்தால்தான் எதிர்வரும் சவால்களை சந்திக்க முடியும்’ என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ROHITSHARMA, INDVNZ, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்