"மீண்டும் மீண்டுமா??.." ஒரு Ball போட்ட உடனே.. மைதானத்தில் அரங்கேறிய சம்பவம்.. கொஞ்ச நேரத்தில் நடந்த 'ட்விஸ்ட்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி இருந்தது.

Advertising
>
Advertising

முன்னதாக, பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள், முதல் குவாலிஃபயர் போட்டியில் மோதி இருந்தது.

மிரட்டிய ஜோஸ் பட்லர்

இந்த போட்டியில், குஜராத் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனையடுத்து, எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதி இருந்தது. லக்னோ அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி, இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இன்று (27.05.2022) மோதி இருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், சதமடித்த இளம் வீரர் ராஜத் படிதார், இந்த போட்டியில் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 106 ரன்கள் அடித்து பட்டையைக்  கிளப்பி இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் அடித்த நான்காவது சதம் இதுவாகும். 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி, இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. மே 29 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில், குஜராத் அணியை ராஜஸ்தான் சந்திக்கவுள்ளது.

மைதானத்தில் பரபரப்பு

இதனிடையே, பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ஆரம்பித்த உடனேயே மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று, கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்சிபி அணி பேட்டிங்கை தொடங்கிய போது, கோலி மற்றும் பாப் டு பிளெஸ்ஸிஸ் ஆட வந்தனர். முதல் பந்தை போல்ட் வீசி முடித்ததும், மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர், களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த கோலி அருகேயே வந்து விட்டார்.

இதனால், அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு  ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் ரசிகரை வெளியே தூக்கிச் சென்றனர். முன்னதாக, லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போதும், கோலி ஃபீல்டிங் செய்த போது அவர் அருகே ஓடி வந்த ரசிகரை போலீஸ் ஒருவர் தோளில் தூக்கிச் சென்றதை பார்த்து, கோலி கொடுத்த ரியாக்ஷன்கள் பெரிய அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

VIRATKOHLI, RCB VS RR, IPL 2022, FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்