டெஸ்ட்டில் விளையாடிய ‘அனுபவம்’ அதிகம் இல்லை.. ‘அப்போ அவர் கொடுத்த அட்வைஸ் ரொம்ப உதவியா இருந்துச்சு’.. நட்சத்திர வீரரை புகழ்ந்த இந்திய ‘மகளிர்’ கிரிக்கெட் வீராங்கனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகளுக்கு மனரீதியாக தயார்படுத்திக்கொள்ள இந்திய வீரர் ஒருவர் கொடுத்த ஆலோசனை உதவியாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன், மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்திய மகளிர் அணி, 7 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் கேப்டன் மிதாலிராஜை தவிர மற்ற வீராங்கனைகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவம் கிடையாது.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘வலைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரஹானேவுடன் பேசும் வாய்ப்பு அமைந்தது. அப்போது, டெஸ்ட் போட்டிகளில் எப்படி நீண்ட நேரம் விளையாடுவது என்பது குறித்து பல ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
நாங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ரஹானே கொடுத்த ஆலோசனை எங்களை மனரீதியாக தயார்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. இந்த ஆலோசனைகளை பின்பற்றி சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலிராஜ், தனது 22 ஆண்டுகால கிரிக்கெட்டில் இதுவரை 10 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (16.06.2021) பிரிஸ்டல் (Bristol) மைதானத்தில் தொடங்குகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'டீம்'க்கு தேவைன்னா நான் அதை செய்வேன்.." 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் 'இறுதி' போட்டிக்காக.. வேற லெவலில் திட்டம் போடும் 'ரஹானே'??.. "அப்போ கன்ஃபார்மா 'சம்பவம்' இருக்கு!!"
- டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரு கெத்து?.. தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஐசிசி!.. WTC Final மூலம் இந்திய வீரருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!
- "'கோலி' எப்போ சொதப்புராறோ, அப்போ எல்லாம் இவரு தான் 'ஹீரோ' மாதிரி வந்து நம்ம டீம காப்பாத்துறாரு.." 'முன்னாள்' வீரர் சொன்ன சிறப்பான 'விஷயம்'!!
- 'செம்ம டேலண்ட் அவரு'!.. '100 டெஸ்ட் மேட்ச்ல விளையாடுற தகுதி இருக்கு'!.. இந்திய அணி இளம் வீரரை தினேஷ் கார்த்திக் புகழ்ந்த பின்னணி என்ன?
- 'இதுவரை யாரும் பார்க்காத... ரோகித்தின் இன்னொரு முகம்'!.. 'டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக புதிய அவதாரம்'!.. அசந்து போன பயிற்சியாளர்!
- ‘கங்குலியின் 25 ஆண்டுகால சாதனை முறியடிப்பு’!.. அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை ‘அலறவிட்ட’ நியூஸிலாந்து வீரர்.. அப்போ இந்தியாவுக்கு செம ‘டஃப்’ கொடுப்பார் போலயே..!
- ‘அந்த பவுலர்தான் நமக்கு சவாலா இருக்க போறார்’!.. ‘இதை மட்டும் சரியா பண்ணிட்டா நாம ஜெயிச்சிறலாம்’.. அஸ்வின் கணிப்பு..!
- "அடுத்த 'கேப்டன்' இவரு தான் போல!.." 'பிசிசிஐ' போடும் 'மாஸ்டர்' பிளான்??.. அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
- 89 வருசத்துக்கு பிறகு ‘முதல்முறையா’ இந்தியா இப்படியொரு போட்டியில் விளையாட போகுது.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடக்கவுள்ள சுவாரஸ்யம்..!
- ‘3 மாத சுற்றுப்பயணம்’!.. 2 விக்கெட் கீப்பர் போதாது, இன்னொருத்தர் வேணும்.. பிசிசிஐ எடுத்த ‘சூப்பர்’ முடிவு..!