'கையில் தட்டு...வயிற்றில் பசி.. கண்களில் ஏக்கம்'.. பெண் குழந்தையின் வாழ்வில் ஒளி ஏற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகை புகைப்பட ஸ்ரீனிவாஸ் கடந்த புதன் கிழமை அன்று தெலுங்கானாவின் குடிமால்கபூர் பகுதிக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு புகைப்படங்களை சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது பள்ளி ஒன்றின் வாசலில் இருந்து பள்ளிக்குள் ஏக்கமாக எட்டிப் பார்த்தபடியும், கையில் தட்டுடனும் இருந்த 5 வயது மதிக்கத்தக்க சிறுமியை பார்த்து கண்கலங்கியுள்ளார் ஸ்ரீனிவாஸ். உடனே தனது புகைப்படக் கருவில் அக்குழந்தையை படம் எடுத்துள்ளார். பின்பு அக்குழந்தையை விசாரித்துள்ளார். அப்போது அக்குழந்தை, தன் பெயர் ரேவதி என்றும், பள்ளியில் படிக்காத அக்குழந்தை அங்கு கொடுக்கப்படும் மதிய உணவை வாங்கி சாப்பிட்டு பசியை போக்கிக் கொள்வதற்காகவே அப்பளிக்கு தினமும் வருவதாக கூறியுள்ளாள். இதுபற்றி தனது பத்திரிகையில் பசியின் பார்வை என்கிற பெயரில் ஸ்ரீனிவாஸ் ஒரு கட்டுரை எழுதினார்.

இந்த கட்டுரையைப் படித்த குழந்தைகள் நல சமூக இயக்கம் ஒன்று ஸ்ரீனிவாஸின் உதவியுடன் குழந்தையை அணுகியது. சிறுமியின் தாய், தந்தையர் குப்பை அள்ளும் பணி செய்பவர்கள் என்று, காலையில் 6 மணிக்கே வேலைக்குச் செல்லும் அவர்களின் மூத்த மகள் ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாகவும், இளைய மகள் ரேவதிக்கு இன்னும் 5 வயது நிரம்பாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

தாய் தந்தையர் வீட்டில் இல்லாததால், சிறுமி மதிய உணவுக்காக பள்ளிக்கு வந்துள்ளார் எனினும் 5 வயது நிரம்பாத குழந்தைகளுக்காக இயங்கும் அரசு அங்கன்வாடி மையங்கள் பற்றி அந்த இயக்கம் அப்பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியது. எனினும் சிறுமி ரேவதியை அந்த இயக்கம் பள்ளியில் சேர்த்துள்ளது. தினமும் வயிற்றுப் பசிக்காக காத்திருந்த அதே பள்ளிக்கு சீருடையுடன் அறிவுப்பசியைப் போக்கிக் கொள்ளத் தயாராக சிறுமி ரேவதி பள்ளி செல்லத் தொடங்கியுள்ளாள்.

TELANGANA, SCHOOL, EDUCATION, PHOTOJOURNALISM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்