'நீங்க ஜெயிச்சது ரியல் டீம் கெடையாது...' 'பி டீமை தான் ஜெயிச்சிருக்கீங்க...' 'இந்தியாவை கிண்டல் செய்த கிரிக்கெட் வீரர்...' - இதையே ஒரு வேலையா வச்சுருக்காரே...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வெற்றியை, இங்கிலாந்து பி டீமை வென்றதற்கு வாழ்த்துகள் என மிகவும் நக்கலாக பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் தொடர்ச்சியாக கிண்டல் செய்து வருகிறார்.
இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை பீட்டர்ஸன் மிகவும் கிண்டல் செய்து, நீங்கள் உண்மையான இங்கிலாந்து அணியை வெல்லவில்லை. பி டீமைத்தான் தோற்கடித்து உள்ளீர்கள் என்று கிண்டல் பதிவிட்டுள்ளார்.
பீட்டர்ஸன் ட்விட்டர் பதிவில்“இங்கிலாந்து பி டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலியை, சுழற்சி முறை ஓய்வுக்காக நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் பீட்டர்ஸன் கண்டித்துள்ளார்.
அந்த பதிவில், “மிகவும் சவாலான இடத்தில் டெஸ்ட் போட்டியில் வெல்ல சிறந்த அணியை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களால் உங்கள் உணர்ச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2005-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் நாங்கள் வென்றோம். அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் தோற்றத்தை மாற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணியின் பெயர் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டுமானால், சிறந்த அணியைத் தேர்வு செய்தால்தான் முடியும். மொயின் அலி ஒரு டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்புகிறார்.” என பீட்டர்சன் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...!
- 'நான் அப்போவே உங்கள வார்ன் பண்ணேன்...' 'இப்படி பண்ணாதீங்கன்னு...' நியாபகம் இருக்கா...? - முன்னாள் வீரர் போட்ட பதிவு...!
- 'ஏங்க... உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைங்க'!.. 'எங்கிருந்தோ வந்து... எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு பா!'.. இந்திய வீரர்களை அலறிவிட்டு.. சம்பவம் செய்தது எப்படி?
- “சர்ச்சை பதிவுக்குரிய கணக்குகளை முடக்குங்க!” - ட்விட்டரை எச்சரித்த மத்திய அரசு!
- 'சென்னையில் நடைபெறும் டெஸ்ட்'... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- அடடடடா!.. இந்த மனுஷன் மட்டும் ஏன் இப்படி இருக்காரு?.. எங்க போனாலும்... இத மட்டும் விடமாட்றாரு!.. சென்னையில் விராட் தரமான சம்பவம்!!
- 'பாகிஸ்தான் வீரரை அசிங்கப்படுத்திய ஐசிசி'...'அதுக்காக இந்திய வீரரை தெருவில் இழுத்துவிட்ட பாக் ரசிகர்'... முகம் சுழிக்க வைத்த செயல்!
- 'தவறுதலாக தொலைந்த பாஸ்போர்ட்'... 'அதுக்காக 18 வருடம் சிறை'... பல கொடுமைகளை கடந்து வந்த சிங்கப்பெண்!
- 'என் முகத்துல முட்டைய தூக்கி வீசிட்டாங்க...' 'அதுக்காக எனக்கு ஃபீலிங்லாம் இல்ல...' - இப்படி சொல்றதுக்கு காரணம் 'இவரு' தான்...!
- “நீ நார்மலாவே ஆடு.. நான் இத பண்றேன்!”.. ‘ஆஸி மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றி!’.. மைதானத்தில் நடந்த சீக்ரெட் திட்டங்களை போட்டு உடைத்த ரஹானே!