‘ஐசிசி கிட்ட தாராளமா கம்ளைண்ட் பண்ணிக்கோங்க’!.. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைத்த குற்றச்சாட்டுக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், காஷ்மீர் பிரீமியர் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் விளையாடக் கூடாது என பிசிசிஐ வற்புறுத்துவதாக, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்ஷெல் கிப்ஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து பிசிசிஐ தவறான போக்கை கடைபிடிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பிய மன நிலையில் உள்ளது. பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ள கிப்ஸ், சூதாட்ட புகாரில் ஈடுபட்டவர். காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசியிடம் தாராளமாக கொண்டு செல்லுங்கள். நாங்கள் அதனை வரவேற்கிறோம்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்