சிஎஸ்கே பேட்டிங் செஞ்சி முடிச்சதும்.. கே.எல்.ராகுலுக்கு சென்ற ‘சீக்ரெட்’ தகவல்.. ஓகோ இதுதான் அந்த ‘அதிரடி’ ஆட்டத்துக்கு காரணமா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் 53-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கே.எல்.ராகுல், ‘மைதானம் மிகவும் வெப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் ப்ளான் மிக எளிமையானதுதான். வீரர்கள் அனைவரும் நல்ல காம்பினேஷனுடன் விளையாடினார்கள். சென்னை அணி பேட்டிங் செய்து முடித்ததும், இந்த டார்க்கெட்டை 14 ஓவர்களில் சேசிங் செய்தால் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.

அதனால் முதல் பந்தில் இருந்தே அடிக்க தயாரானோம். இந்த மாதிரியான போட்டிகளில் தெளிவாக விளையாட வேண்டியது அவசியம். அதனால்தான் நான் பந்துகளை நேர்த்தியாக அடித்தேன். ஹேசல்வுட்டுக்கு எதிராக ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்சர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இப்போட்டியில் அணிக்கு வெற்றியை தேடி தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் போட்டிகளில், இதேபோல் அதிரடியாக விளையாடவே விரும்புகிறேன். ஏனென்றால் அடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ளது’ என் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்