‘ரொம்ப நாளா காத்துக்கிடந்தவன் இன்னைக்கு வெளுத்து வாங்கிட்டான்!’- பதான் புகழும் அந்த ‘360 டிகிரி’ நாயகன் யார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி நேற்று பல புதிய மாற்றங்கள் உடன் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி டி20 முதல் போட்டியை வென்றுள்ளது. இதில் இந்திய அணியில் இம்முறை களம் இறக்கப்பட்ட பல இளம் வீரர்களுள் ஒருவரை மட்டும் பலரும் புகழ்ந்து வருகின்றனர். முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஒரு படி மேலே சென்று, ‘இந்திய அணியின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலாய் கிடைத்தவன்’ என ‘இந்த’ இளம் வீரரை பாராட்டி உள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று ஜெய்பூரில் நடைபெற்றது. அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இதே டி20 முறை விளையாட்டில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி நேற்று தனது வெற்றியால் மீண்டு வந்துள்ளதை காட்டியுள்ளது. நேற்றய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரின் கவனங்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

நேற்றைய போட்டியில் சுழன்று சுழன்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வலது கை பேட்ஸ்மேன் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய டி20-யில் மூன்றாவது வீரர் ஆக களம் இறக்கப்பட்ட சூர்யகுமார் புது கேப்டன் ரோகித் சர்மா உடன் இணைந்து அசத்தலான கூட்டணியை உருவாக்கினார்.

சூர்யகுமார்- ரோகித் சர்மா கூட்டணி மட்டும் 59 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். நேற்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் ஆக சூர்யகுமார் அங்கீகரிக்கப்பட்டார். மேலும், முன்னாள் இந்திய வீரர் ஆன இர்ஃபான் பதான், “அபார பேட்டிங் திறமை கொண்ட சூர்யகுமார் யாதை இனிமேல் ‘360 டிகிரி’ வீரர் என்றே அழைக்க வேண்டும்” எனக் கூறி பாராட்டி உள்ளார்.

மேலும் பதான் கூறுகையில், “இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் முக்கிய இடம் பிடிப்பாரா என்பதை இப்போது கூற முடியாது. அதற்கு இன்னும் காலம் ஆகும். ஆனால், நிச்சயமாக சூர்யகுமாரின் எதிர்காலம் பிரகாசம் ஆக இருக்கிறது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் சரியான ஃபார்மில் இல்லை. அங்கு அவருக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் உபயோகப்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால், நல்ல பேட்ஸ்மேன் என்ற பெயரை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். உள்ளூர் ஆட்டங்களில் எல்லாம் சூர்ய குமார் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபில் போட்டிகளில் தனது ஆட்டத்தில் ஒரு நல்ல பெயரைப் பெற்றுவிட்டார். அதனால் அவரை நான் தரமான பேட்ஸ்மேன் என்றே கூறுவேன். இந்திய அணியின் 360 டிகிரி வீரர் யார்? என்ற கேள்விக்கு சூர்யகுமார் விடையாக வந்துள்ளார் என்று என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் எந்த திசையிலும் அவரால் பந்தை அடிக்க முடியும். மேலும், அத்தனை திசைகளில் இருந்து பந்துகள் வந்தாலும் அவருக்கு சமாளிக்கும் திறன் இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களை நல்ல சமாளிக்கிறர். இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய முழு திறமையையும் நமக்கு காண்பித்துவிட்டார்” எனப் பாராட்டி உள்ளார்.

CRICKET, INDVSNZ, SURYAKUMAR YADHAV, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்