"எங்களுக்கு அவரு ஒருத்தரோட 'விக்கெட்' தான் வேணும்... அவர மட்டும் தூக்கிட்டோம்னு வைங்க..." "ஆஸ்திரேலியா டீம் 'டார்கெட்' இவரு தான் போல..."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் வரும் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்திய அணியின் மிகப் பெரிய விக்கெட்டாக விராட் கோலியை கருதுவதாகவும், அவரை வீழ்த்துவதே எங்கள் அணியின் இலக்காக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

'இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் போல, நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் போல, ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கியமான வீரர் இருப்பார். அப்படி இந்திய அணிக்கு முக்கிய வீரராக திகழ்வது விராட் கோலி தான்.

அவரது விக்கெட்டை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவது சற்று எளிதாகலாம். போட்டியின் போது வர்ணனையாளர்கள் இடைவிடாது பேசுவது கோலியை குறித்து தான். அதனால் அவரது விக்கெட்டை வீழ்த்தி அவரை அமைதியாக்குவோம்' என தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தயாராகி வருவது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ், 'இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இங்கிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் எங்கள் அணி வீரர்கள் விளையாடியுள்ளதால் எங்களுக்கு அதிக பயிற்சி கிடைத்துள்ளது. இதனால் எங்கள் அணியை எதிர்கொள்வது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்